தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Wednesday, December 5, 2012

டிச 6 – தமுமுக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் புவனகிரி யில் நடைப்பெறும்


பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6ல் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும் ஆகிய இரட்டைக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடலூர் மாவட்ட {தெர்கு} சார்பாக  காட்டுமன்னார்குடியில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தது.
தர்போது 01.12.2012 முதல் 10.12.2012 வரை காட்டுமன்னார்குடி பகுதியில் 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது தடையை மீறி காட்டுமன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என்று தலைமை நிர்வாகம் கூரியதால் சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரி யில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடலூர் மாவட்ட {தெர்கு} சார்பாக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெரும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Saturday, December 1, 2012

முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் இரங்கல் செய்தி:
முன்னாள் பிரதமரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஐ.கே.குஜ்ரால் அவர்களின் மறைவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
வி.பி.சிங் அவர்களின் அரசியல் எழுச்சியின் மூலமாக அரசிய-ல் அறிமுகமானவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஐ.கே.குஜ்ரால் அவர்கள் முதன்மையானவர்.
வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் இருந்தபோது அண்டைய நாடுகளுடன் சுமூக உறவை பலப்படுத்துவதில் அக்கறைக் காட்டினார். இவர் பிரதமராக இருந்த காலத்தில் ஊழலுக்கு இடம்கொடுக்காமல், மதச்சார்பற்ற அரசியலை சிறப்பாக வழிநடத்தினார்.
எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் பொதுவாழ்வை நகர்த்தியவரின் உயிர் இன்று முற்றுப்பெற்றுள்ளது. அரிதான அரசியல் தலைவர்களில் ஒருவரான இவரது இழப்பு இந்தியாவிற்குப் பேரிழப்பாகும்.

சிறைவாசி அபுதாகிர் விடுதலைக்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து உயிருக்கு போராடிவரும் சிறைவாசி சகோதரர் அபுதாகிர்... நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோசமாகிவருகிறது... சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன... கண்பார்வை வேகமாக குறைந்துவருகிறது... வலதுகால் மூட்டுக்கு கீழ் கொப்புளங்கள் இரத்தமும் சீளுமாக அவருக்கு மிகுந்த வேதனையை தருகிறது.
உயிரின் இறுதி கட்டத்தில் இருக்கும். உயர் சிகிச்சைக்காக அவரை நீதி மன்றம் 90 நாள் பரோல் கொடுத்தும் அதை மதிக்காமல் தமிழக அரசு இன்னும் அவரை மருத்துவ் மனையில் வைத்து சிறை படுத்தி உள்ளனர்.

சிறைவாசி அபுதாகிர் உயிருக்கு போராட்டம் - நீதிக்கான போராட்டம்


கோவை சிறையில் கடந்த 14 ஆண்டுகளாக வாடிக்கொண்டு இருக்கும் சிறைவாசி அபுதாகிர் என்பவர் இரு சிறுநிரகமும் பாதிக்கப்பட்டு இதய நோய்க்கும் உள்ளாகி பார்வை குறைபாடும் ஏற்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்... கடந்த 11 மாதங்களாக சிகிச்சைக்காக பரோல் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டுள்ளதால் நோயின் பாதிப்பு அதிகமாகி அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது.
மேலும் இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் சிறுபான்மை அறக்கட்டளை வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 24 -08 -12 அன்று சிறைவாசி அபுதாகிர் 30 -08 -2012 அன்றில் இருந்து பரோலில் விட உள்துறை செயலாளருக்கு உத்தரவு இட்டு இருந்தது. எனினும் அபுதஹிரை சிறையில் வைத்துள்ளது ...

Thursday, November 29, 2012

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படுகிறது - இந்தியாவுக்கான தூதர் தகவல்



சிறைவாசி அபுதாகிர் உயிருக்கு போராட்டம் - நீதிக்கான போராட்டம்


கோவை சிறையில் கடந்த 14 ஆண்டுகளாக வாடிக்கொண்டு இருக்கும் சிறைவாசி அபுதாகிர் என்பவர் இரு சிறுநிரகமும் பாதிக்கப்பட்டு இதய நோய்க்கும் உள்ளாகி பார்வை குறைபாடும் ஏற்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்... கடந்த 11 மாதங்களாக சிகிச்சைக்காக பரோல் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டுள்ளதால் நோயின் பாதிப்பு அதிகமாகி அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது.
மேலும் இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் சிறுபான்மை அறக்கட்டளை வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 24 -08 -12 அன்று சிறைவாசி அபுதாகிர் 30 -08 -2012 அன்றில் இருந்து பரோலில் விட உள்துறை செயலாளருக்கு உத்தரவு இட்டு இருந்தது. எனினும் அபுதஹிரை சிறையில் வைத்துள்ளது ...

காவிரி நதிநீதி விவகாரம்: அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளைக் கூட்டவேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக மாநில அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. பிரதமர் தலைமையிலான காவிரி நீர் தீர்ப்பாணையமும் மற்றும் உச்சநீதிமன்றமும் கர்நாடக மாநில அரசு ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டுமென உத்தரவுகள் பிறப்பித்தும் அதை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்தாத சூழ்நிலையில் தமிழக முதல்வர் அவர்கள் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடக முதல்வரோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மறுத்துள்ள கர்நாடக அரசை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிப்பதோடு, காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக முதல்வர் அவர்கள் அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

(ஜே.எஸ்.ரிபாயீ)

தமிழக முதலமைச்சருடன் முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பில் நடந்தது என்ன?


தீபவளி அன்று வெளியான துப்பாக்கி திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டன. இந்த பின்னணியில் துப்பாக்கி படக் குழுவினர் இது குறித்து தமிழக முதல்வரை சந்திக்க முயற்சித்தனர். தமிழக முதலமைச்சர் இவர்களை பார்க்க மறுத்து விட்டார். உள்துறைச் செயலாளர் ராஜகோபாலனை படக் குழுவினர் சந்தித்தனர். வர்த்தக ரீதியாக படம் எடுக்கின்றீர்கள். நீங்கள் பொறுப்புணர்வு இல்லாமல் படம் எடுத்து விட்டு பின்பு பாதுகாப்பு கேட்டால் எங்களால் தர இயலாது. புண்பட்ட முஸ்லிம் சமுதாய பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசி சுமூக நிலையை ஏற்படுத்துங்கள் என்று உள்துறைச் செயலாளர் திரு. இராஜகோபாலன் படக் குழுவினருக்கு அறிவுறுத்தினார். இதன் பிறகு தான் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தியதுடன் பகிரங்க மன்னிப்பு கேட்டனர். தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சமூகத்தின் எதிர்ப்பின் காரணமாக ஒரு திரைப்படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டதும் திரைப்படக் குழுவினர் பகிரங்கமாக முஸ்லிம் சமுதாய பிரதிநிதிகள் முன்னிலையில் பத்திரிகையாளர் கூட்டத்தில் மன்னிப்பு கேட்டதும் இதுவே முதன் முறையாகும். இந்த பின்னணியில் துப்பாக்கி பட விவகாரத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை புரிந்து செயல்பட்ட தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றித் தெரிவிப்பதுடள் சமுதாயத்தின் முக்கிய கோரிக்கைகளை அவரிடம் எடுத்துரைப்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தலைமைச் செயலகத்தில் நேற்று (நவம்பர் 28) தமிழக முதலமைச்சரைச் சந்தித்தனர்.

தமுமுகவின் மீது அவதூறு: மத்திய அரசுக்கு தமுமுக கண்டனம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
அரசு சார்பற்ற நிறுவனங்கள் 2008-09ஆம் ஆண்டுகளில் ரூ. 10,997.35 கோடியும், 2009-10 ஆண்டில் ரூ.10,431.12 கோடியும், 2010-11ல் ரூ.10,334.12 கோடியும் வெளிநாட்டு பணம் பெற்றுள்ளதாகவும், இவற்றில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோவையும் ஒன்று என்றும் மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஒரு அரசு சாரா நிறுவனம் அல்ல. அது எந்தவொரு வெளிநாட்டு அரசிடமிருந்தோ, வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்தோ ஒரு ரூபாய் கூட பெற்றதில்லை.

பேஸ்புக்கில் கருத்து: 2 பெண்களுக்கு தண்டனை விதித்த மாஜிஸ்திரேட் திடீர் இடமாற்றம்: மும்பை ஐகோர்ட்


சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம் அடைந்ததைத் தொடர்ந்து மறுநாள் மும்பையில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இதை மராட்டிய மாநிலம் பல்கர் நகரை சேர்ந்த 2 இளம்பெண்கள் பேஸ்புக் இணையத்தளத்தில் விமர்சனம் செய்திருந்தனர்.
சிவசேனா நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த 2 இளம்பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க பல்கர் மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பகடே உத்தரவிட்டார். பிறகு ரூ.15 ஆயிரம் ஜாமீனில் விடுவித்தார்.
இதற்கிடையே பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட 2 பெண்கள் கைதானது நாடெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2 பெண்களுக்கு தண்டனை கொடுத்ததும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பகடே இன்று திடீரென பல்கர் மாவட்டத்தில் இருந்து ஜல்கான் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மும்பை ஐகோர்ட் வெளியிட்டுள்ளது.

பொள்ளாச்சி பேருந்து விபத்து - மீட்பு பணியில் தமுமுக


பொள்ளாச்சி அருகே வால்பாறை மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 47 பேர் படுகாயமடைந்தனர்.
வால்பாறையில் இருந்து புறப்பட்ட இந்த பேருந்து, பழனி செல்வதற்காக, வால்பாறை மலைப்பாதை அருகே நேற்றிரவு 10.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. பொள்ளாச்சி அருகே ஆழியார் மலைப்பாதையில் உள்ள மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, பேருந்து ஓட்டுனரி்ன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை உடைத்துக் கொண்டு, 300 அடி பள்ளத்தில் விழுந்தது.

Monday, November 26, 2012

பெரும் வெற்றியோடு நிறைவடைந்தது பரப்புரை

மமக வின் சார்பில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை எதிர்த்து கடந்த 23,24,25 ஆகிய 3 நாட்களும் நடைபெற்று வந்த துண்டு பிரசுர விழிப்புணர்வு பரப்புரை இன்று மாலையோடு நிறைவடைந்தது.
மூன்றாவது நாளான இன்றும் சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் மமக வினர் துண்டு பிரசுரங்களை வழங்கி பரப்புரையை எழுச்சியோடு நடத்தினர். மத்திய அரசின் தவறான முடிவுக்கு எதிராக பரப்புரயின்போது மமக வினர் எழுப்பிய முழக்கங்கள் மொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
மக்களிடம் பெரும் வரவேற்று இருக்கின்ற காரணத்தால் ஒரு சில மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் பரப்புரையை தொடர உள்ளது குறிப்பிட தக்கது.

இரண்டாவது நாளாக எழுச்சி

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை எதிர்த்து மமக நேற்று தொடங்கிய துண்டு பிரசுர விழிப்புணர்வு பரப்புரை இன்று இரண்டாவது நாளாக மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. நேற்று மாவட்ட தலைநகரங்கள், பெரு நகரங்களில் தொடங்கிய பரப்புரை இன்று சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் பரவியது.
மமக வின் டி ஷர்ட் கலை அணிந்து கொண்டு கொடிகளை கையில் ஏந்தி வீதி வீதியாக துண்டு பிரசுரங்களை மமக வினர் வழங்கி வருகிறார்கள்.
கடை வீதிகளிலும், பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரங்களை வாங்கி படிக்கும் மக்கள் மமக வின் இப்பரப்புரையை வரவேற்று பாராட்டுகின்றனர்.

தருமபுரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மமக பொதுச்செயலாளர் ஆறுதல்

22-11-12 அன்று தருமபுரி அருகே சாதிக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் M தமிமுன் அன்சாரி, மாநில அமைப்பு செயலாளர் மண்டலம் S M ஜைனுலாபிதீன் மாநில செயலாளர் தருமபுரி சாதிக், மமக வின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ அஸ்லம் பாஷா MLA மற்றும் மமக வின் தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மத்திய அரசுக்கு கொள்கை பக்கவாதம்

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சில்லறை வணிகத்தில் 51% அந்நிய முதலீடுகளை எதிர்த்து 1 கோடி துண்டு பிரசுரங்களை வழங்கும் விழிப்புணர்வு பரப்புரை தொடங்கப்பட்டிருக்கிறது.
நவம்பர் 23, 24, 25 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி முழுக்க மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் தொடங்கி கிராமங்கள் தோறும் இப்பரப்புரை நடக்கிறது.
சென்னை புரசைவாக்கத்தில் மாநிலத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி, வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இஸ்ரேலுக்கு எதிராக தமுமுக ஆர்ப்பாட்டம்

கடந்த 10 நாட்களாக அமெரிக்க அடிமை இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள குடியிருப்புகளை நோக்கி 500 க்கும் அதிகமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி குழந்தைகளும், பெண்களும் மட்டுமே 500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
உலக நாடுகளோ, இந்திய அரசோ இதை கண்டு கொள்ளவில்லை.. இந்த போக்கை கண்டித்தும் இஸ்ரேல் தூதரகத்தை இந்தியாவில் இருந்து வெளியேற்ற கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று மாலை 4 மணிக்கு நடத்தியது. தமுமுக தொண்டர்களும் மனிதநேய ஆர்வலர்களும் 500 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். மாநில செயலாளர் நாவலூர் மீரான் அவர்களும், பி.எஸ். ஹமீது அவர்களும், மாநில துணை தலைவர் குணங்குடி ஹனீபா அவர்களும் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.மாவட்ட நிர்வாகிகள் கோசங்களை எழுப்ப வட சென்னை மாவட்ட தலைவர் உஸ்மான் அலி, நன்றியுரை நிகழ்த்தினார்.

ராஜபக்சேவை மலேசியாவில் அனுமதிக்கக் கூடாது - மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சி இணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிடும் அறிக்கை.
வருகின்ற டிசம்பர் 4ம் தேதி மலேசியாவில் நடைபெறும் இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த செய்தி உண்மையாக இருக்குமானால், போர் என்ற போர்வையில் லட்சக்கணக்கான மக்களை கொடூரமாக கொன்றவனுக்கு அங்கீகாரம் அளிப்பது போன்றதாகும். 2009ல் நடைபெற்ற இறுதி கட்டப் போரில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக ராஜபக்சே அரசால் நியமிக்கப் பட்ட LLRC ஆணையமே குற்றம் சாட்டியுள்ளது, சமீபத்தில் ஐ.நா. சபைகூட ராஜபக்சேவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Friday, November 23, 2012

விழுப்புரம் தெற்கு மாவட்ட பொதுக்குழு


18-11-2012 அன்று விழுப்புரம் தெற்கு மாவட்ட பொதுக்குழு சங்கராபுரத்தில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவிற்கு தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் எஸ்.எஸ். நாசர் உமரி, மாநில தொண்டரணி செயலாளர் அப்துல் காதர், விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் உஸ்தாத் தீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது, இதில் மாவட்ட தலைவராக கள்ளக்குறிச்சி முஜிபுர் ரஹ்மான், தமுமுக மாவட்ட செயளாளர் திருக்கோயிலூர் பாசில் முஹம்மது, மமக மாவட்ட செயளாளர் உளுந்தூர்பேட்டை முஹம்மது அலி, மாவட்ட பொருளாளராக சங்கராபுரம் அயூப் கான், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்


பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் கடந்த 10 நாட்களாக இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத யுத்தத்தைக் கண்டிக்க வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடமையாகும். இஸ்ரேல் பிரதமரை ஐ.நா. அமைப்பு, போர்க்குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும் என்பது பாலஸ்தீன மக்களின் விருப்பமாகும். எனவே இக்கோரிக்கைகளை வ-யுறுத்தி தமுமுக சார்பில் திட்டமிட்டபடி நாளை மாலை 4 மணிக்கு மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமுமுக தலைமையகம்.

தர்மபுரியில் பொதுச்செயலாளர் முகாம்


தர்மபுரி அருகே சாதி கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி இன்று தர்மபுரி சென்றிருக்கிறார். அவருடன் மமக வின் மாநில அமைப்பு செயலலாளர் மண்டலம் ஜைனுலாபுதீன் அவர்களும், மமக வின் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா, மாநில செயலாளர் தர்மபுரி சாதிக் ஆகியோரும் தர்மபுரி சென்றிருக்கிறார்கள்.

மமக தலைமையகம்

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடுகளை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி பரப்புரை


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நவம்பர் 23, 24, 25 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் துண்டுப் பிரசுர விழிப்புணர்வு பரப்புரை நடத்தப்பட உள்ளது.
வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இதுகுறித்து முழு விபரங்கள் அடங்கிய 1 கோடி துண்டுப் பிரசுரங்கள் வினியோகத்தை மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் கட்சியின் தலைமை நிர்வாகிகள் தொடங்கி வைக்கிறார்கள். இவைதவிர, சுவரொட்டிகள், வீதி முழக்கங்கள், தெருமுனைக் கூட்டங்கள், வாகன பரப்புரை என பன்முக அம்சங்களோடு இப்பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

பாலஸ்தீனத்திற்காக தமுமுக ஆர்ப்பாட்டம்


கடந்த ஒரு வாரமாக பாலஸ்தீனத்தின் மீது ரவுடித்தனமாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலின் பயங்கரவாதத்தைக் கண்டித்து தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 23.11.2012 (வெள்ளி) அன்று மாலை 4 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இஸ்ரே-ன் பயங்கரவாதத்தைக் கண்டித்தும், இஸ்ரேலுடனான தூதரக உறவை மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் தலைமை ஏற்க உள்ளார்கள் (இன்ஷாஅல்லாஹ்).
தமிழகத்தின் பிற இடங்களில் இஸ்ரேலின் பயங்கரவாதத்தைக் கண்டித்து கண்டன சுவரொட்டி ஒட்டுமாறும் மாவட்ட நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(கண்டன சுவரொட்டி மாதிரி கீழே உள்ளது)
- தமுமுக தலைமையகம்

Monday, November 19, 2012

அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து மாநிலம் முழுவதும் நவம்பர் 23, 24, 25 தேதிகளில் ம.ம.க. பிரச்சாரம்!


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது. இதையொட்டி வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்திய சில்லறை வர்த்தகத்தை ஆக்கிரமிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய சிறுகடை வியாபாரிகளும், வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் முடிவினைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் வருகிற 23, 24, 25 ஆகிய தேதிகளில் துண்டுப் பிரசுர விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

(ஜே.எஸ்.ரிபாயீ)

துப்பாக்கி: கொந்தளிப்பும் மன்னிப்பும்


தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடித்து, முன்னணி இயக்குனர்களில் ஒருவரான முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியானது. இப்படம் வெளியாகி இரண்டொரு காட்சிகளுக்குள்ளே தமிழகம் முழுவதிலும் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பு உண்டானது.
இப்படத்தைத் தடை செய்தாக வேண்டும் என்று நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தமுமுக தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்புகள் துருதுருத்தன. படம் பற்றிய சர்ச்சை "விஸ்வரூபம்' எடுத்துக்கொண்டே வந்ததால் தமுமுக தலைமை, திரைப்படத்தைப் பார்த்துவிட்டுத்தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று முடிவு செய்தது.
இந்தச் சூழ்நிலையில், மமக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி முயற்சியில், படக்குழுவினர் தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்களைத் தொடர்புகொண்டு, "உங்கள் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். "படத்தைப் பார்த்துவிட்டுத்தான் ஒரு முடிவுக்கு வருவோம்'' என்று கூறினார். "அப்படியானால் படம் பார்க்க நாங்களே ஏற்பாடு செய்கிறோம்'' என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

மன்னிப்புக் கோரியது துப்பாக்கி படக் குழு


நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக வந்த தகவலையடுத்து தமுமுக உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகள் அடங்கிய முஸ்லிம் கூட்டமைப்பு சார்பாக இன்று(15.11.2012) காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாலை வரை நீடித்த இக்கூட்டத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும், நடிகர் விஜய் தரப்பில் எழுத்துமூலமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இதைச் செய்யத் தவறினால் போராட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர்களுடன் பேச தமுமுக பொதுச் செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட பத்து பேர் கொண்ட குழு இன்று மாலை விஜய்யின் தந்தை சந்திரசேகர், படத்தின் டைரக்டர் முருகதாஸ், படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோர் அடங்கிய படக் குழுவினரை சந்தித்து தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
படக்குழு, முஸ்லிம் குழுவிடம், இப்படம் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கவில்லை என்று கூறி மன்னிப்புக் கோரியது மட்டுமல்லாமல் எழுத்துமூலமாக மன்னிப்புக் கடிதம் வழங்குவதாகவும் தெரிவித்தது. படத்தில் முஸ்லிம்களைப் புண்படுத்தும் காட்சிகளை நீக்குவதாகவும் உறுதி அளித்தது.
முஸ்லிம் சமூகத்தை மிகவும் புண்படுத்திய துப்பாக்கி படப்பிரச்சனையில் படக்குழுவினர் முஸ்லிம் தலைவர்களுடனான சந்திப்பிற்கு தமுமுக முன்முயற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

கோவையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைதிக்குழு கூட்டம்


கோவையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைதிக்குழு கூட்டம் நடந்தது. கோவையில் சில நாட்களாக சில விரும்பதாக சம்பவம் நடந்தது. அதனால் பதட்டம் நிலவியது. இதை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் கருணகரான் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவுயிட்டார் உடனே தமிழக அரசின் அமைக்குழு கூட்டத்தை கூட்ட உடனே மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் இஸ்லாமிய இயக்க அமைப்புகளுக்கு இன்று (15-11-2012) வியாழன் மாலை3 மணியளவில் ஆட்சித்தலைவர் ஆட்சிமன்ற கூடத்தில் அமைதிக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது என்ற தகவல் அனைத்து அமைப்புக்கும் கிராம அதிகாரிகள் முலம் தகவல் கொடுக்கப்பட்டு.இயக்க தலைவர்கள் அனைவரும் 3:30 மணியளவில் கூடினார்கள். பிறகு அமைதிக்குழு கூட்டம் நடந்தது. இதில் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் , தமுமுக, ம.ம.க, பிஎப்ஐ, எஸ்டிபி, ஐ,டின்டிஜே, முஸ்லிம் லீக்,சிடிஎம், ஜமாத்இஸ்லாமியஹிந்த், போன்ற அமைப்புகள் தலைவர்கள். வந்தார்கள்,பிறகு ஒவ்வொரு அமைப்பு சார்பாக அதன் தலைவர்கள் தாங்கள் கருத்துகளை பதிவு செய்தார்கள். அதுபோல் அரசு அதிகார்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், கலந்துகெண்டார்கள்.
 

துப்பாக்கி கக்கிய விஷம்


நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த படத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் பல காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தலைமை நிர்வாகிகள் ஜே.எஸ். ரிபாயி, அப்துல் சமது, தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல சமுதாய அமைப்பின் தலைவர்களும், தமுமுக தலைவர்களை தொடர்பு கொண்டு இது குறித்து பேசி வருகிறார்கள்.
இது விசயமாக மமக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நடிகர் விஜய் அவர்களின் தந்தை சந்திரசேகரனிடம் அலைபேசி வழியாக தொடர்பு கொண்டார். அப்போது தனது கண்டனத்தை தெரிவித்து கொண்டதோடு அப்படத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சந்திரசேகரன் அவர்கள் ஒரு சமூகத்தின் மனம் புன்படுவதை தான் விரும்பவில்லை என்றும், அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விடலாம் என்றும் கூறியிருக்கிறார். துப்பாக்கி படத்தில் திருத்தங்களை கூறுங்கள் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.

பஹ்ரைனில் உயிரிழந்த தமிழரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.


பஹ்ரைனில் கடந்த வாரம் நடந்த ஒரு குண்டு வெடிப்பில் தமிழகத்தில் தோப்புத்துறையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் கொல்லப்பட்டார். அவரது உடலை மீட்டு தருமாறு அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அங்குள்ள தமுமுக வினரும், சமுதாய ஆர்வலர்களும் அவரது உடலை பெற்று தமிழகத்திற்கு அனுப்பும் பணியை மேற்கொண்டனர்.
இன்று காலை அவரது உடல் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து இறங்கியது. உடலை திருச்சி தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டு அய்யம்பேட்டையில் உள்ள அவரது மனைவி வீட்டில் ஒப்படைக்கப்பட்டது. அவரது உறவினர்கள் தமுமுக வினருக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தனர்.

Saturday, November 10, 2012

கோவை - பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமுமுக வின் மாநில துணை பொது செயலாளர் இ. உம்மர் அவர்கள் பேட்டி


கோவை மாநகர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் இன்று (9-11-2012) கோவை பத்திரிக்கையாளர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமுமுக வின் மாநில துணை பொது செயலாளர் இ. உம்மர் அவர்கள் பேட்டி அளித்தார்.
இதில் 6-11-2012 ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் சில மர்ம மனிதர்களால் ஒருவர் தாக்குதலுகுள்ளான சம்பவத்தை யொட்டி 7-11-2012 கோவை கரும்புக்கடை பகுதியில் பள்ளிவாசலின் மத குருவாக பணியாற்றும் முஸ்லிம் ஒருவரும் தாக்கப்பட்டார். மேற்படி இரண்டு சம்பவங்களையும் தமுமுக வன்மையாக கண்டிப்பதுடன் உண்மை குற்றவாளிகளையும் காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற தாக்குதலையொட்டி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்து தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இலங்கை வெளிக்கடை சிறையில் கலவரம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
இலங்கை கொழும்பு வெளிக்கடை சிறையில் இன்று திடீர் கலவரம் ஏற்பட்டு ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்பு 1983ல் இதே வெளிக்கடை சிறையில்தான் தமிழ் விடுதலைப் போராளிகளான தங்கமணி, ஜெகன் குட்டிமணி உட்பட 27 தமிழர்கள் சிங்களப் பேரினவாத தூண்டுதலில் படுகொலை செய்யப்பட்டனர். அதுவே இலங்கையில் தமிழர்கள் ஆயுதமேந்தி போராடும் நிலையை ஏற்படுத்தியது.

விஸ்வரூபம் திரைப்படம்: முதலில் எங்களுக்கு காண்பிக்கப்படவேண்டும்-தமுமுக கோரிக்கை


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் அறிக்கை:
பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார். அதில் ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள். ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை. இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை. எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.

உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் - திருச்சியில் நடைபெற்றது


திருச்சியில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மமக மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது, மாநில செயலாளர்கள் கோவை செய்யது,ஆம்பூர்சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா சம்சுதீன் நாசர் உமரி, தருமபுரி சாதிக், மைதீன் உலவி, ராவுத்தர்ஷா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக உள்ளாட்சித் துறையில் பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று திறம்படப் பணியாற்றிய வழக்கறிஞர் மஹபூப் அலி அவர்கள் மிகச்சிறப்பாக வகுப்பெடுத்தார். வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி பேராசிரியர் அபுல்பைசல் அவர்கள் உள்ளாட்சி சீர்திருத்தம் குறித்த கருத்துக்களை விளக்கினார்.

திருச்சியில் தமுமுக நடத்திய எழுச்சி பொதுக்கூட்டம்


முஸ்லிம் ஷரீயத் சட்டத்தில் அத்து மீறி செயல்படும் சமூக நல வாரியத்தை கண்டித்து...  இந்திய அரசியல் அமைப்பும் முஸ்லிம்களின் உரிமைகளும் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் நேற்று 03-11-2012 அன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் தமுமுகவின் தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது, அவர்களும், மாநில செயலாளர் கோவை செய்யது அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

Wednesday, November 7, 2012

இஸ்லாமிய பெண் எழுத்தாளர் மரியம் ஜமீலா மரணம்


சர்வதேச அளவில் பிரபல இஸ்லாமிய பெண் எழுத்தாளர் மற்றும் அறிஞராக விளங்கிய மரியம் ஜமீலா (31.10.2012) லாகூரில் மரணமடைந்தார். சில மாதமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மரியம் ஜமீலா தன்னுடைய 78வது வயதில் காலமானார்.
மே 23, 1934 ஆம் ஆண்டு அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் உள்ள ஒரு யூத குடும்பத்தில் பிறந்த மார்கரெட் மார்கெஸ் எனும் இயற்பெயர் கொண்ட மரியம் ஜமீலா தன்னுடைய 19வது வயதிலிருந்து மதங்களை குறித்து ஆராய தொடங்கினார். மர்மடுகே பிக்தாலால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குரானும் யூதராக இருந்து இஸ்லாத்தை தழுவிய முஹம்மது அஸதின் புத்தகங்களும் தாம் மரியம் ஜமீலாவை இஸ்லாத்தை நோக்கி ஈர்த்தன.

ஒற்றுமையை நோக்கி - தமுமுகவின் ஜமாத்தார்கள் சந்திப்பு நிகழ்ச்சி


சென்னை வில்லிவாக்கம் தமுமுக பகுதி கிளை சார்பாக தமுமுகவின் ஒற்றுமையை நோக்கி என்ற நிகழ்ச்சி இன்று (04-11-2012) நடைபெற்றது. இக்கூட்டத்தில் PowerPoint மூலமாக தமுமுகவின் கடந்த கால வரலாறு பற்றி பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் விளக்கினார்கள். நூற்றுக்கும் அதிகமான ஜமாத் நிர்வாகிகள், இமாம்கள், ஆலிம்கள் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளை தொடுத்தனர்.
பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும், மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்களும் கேள்விகளுக்கு விரிவாக பதில் அளித்தனர். இறுதியாக தமுமுகவின் நோக்கம் ஜமாத்தார்களிடம் தமுமுகவிற்கு இருக்கும் நெருக்கம் ஆகியவற்றை விளக்கி தலைவர் ஜே.எஸ்.ரிபாயி உரை நிகழ்த்தினார்.

Saturday, November 3, 2012

குவைத் தமுமுக மமக வின் மண்டல துணை தலைவர் அவர்களுக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவசர தகவல்


குவைத் தமுமுக மமக வின் மண்டல துணை தலைவர் செய்யது பாட்சா அவர்களுக்கு மனித நேயமக்கள் கட்சி மூத்த தலைவரும் ராமநாத புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ( MLA)அவர்கள் அவசர தகவல் அனுப்பினார்.
அதில் குவைத்தில் ஒருவர் விபத்தில் இறந்து விட்டதாகவும் அது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கும் படியும் கேட்டுக் கொண்டார்,
சமீப காலமாக புதிய உத்வேகத்துடன் துடிப்பான முறையில் வீரியத்துடன் செயல் பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமுமுக - மமக வின் மண்டல செயலாளர் முஜிப்ரகுமான் தலைமையில் அமைப்பு செயலாளர் அலாவுதீன் ,கல்விக்குழு செயலாளர் முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் ,மற்றும் மரைக்காயர் ஆகியோர் விசாரணையில் இறங்கினர்.

திருச்சியில் நடைபெற்று வரும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் - படங்கள்



Friday, November 2, 2012

முஸ்லிம்களின் திருமணப் பதிவுச் சட்டம் எளிமைப்படுத்தப்பட வேண்டும்: அஸ்லம் பாஷா MLA வேண்டுகோள்


2012-2013 ஆம் ஆண்டுக்கான துணை மதிப்பீடுகளுக்கான மானியக் கோரிக்கையின் போது கடந்த 1.11.2012 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:
ஒரு முக்கியமான கோரிக்கை, எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சனை. சென்ற திமுக ஆட்சியிலே மறைமுகமாக எங்கள் ஷரீயத் சட்டத்திலே கை வைத்துவிட்டார்கள் என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். அதற்கு தக்க பதிலடியும் கொடுத்துவிட்டார்கள் எங்கள் சமுதாய மக்கள். முஸ்லிம்களுக்கான திருமணப் பதிவுச் சட்டம் எளிமைப்படுத்தப்பட வேண்டுமென்று நாங்கள் நீண்ட வருடங்களாக கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றோம். சென்ற சட்டமன்றத் தேர்தலின்போதுகூட நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். அவர்களும் அதைப் பரிசீலிப்பதாகச் சொன்னார்கள் ஆகவே, வெகுவிரைவிலே தமிழகத்திலே முஸ்லிம்களின் திருமணப் பதிவுச் சட்டம் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்று நான் இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: அஸ்லம் பாஷா MLA கோரிக்கை


2012ல-2013 ஆம் ஆண்டுக்கான துணை மதிப்பீடுகளுக்கான மானியக் கோரிக்கையின் போது கடந்த 1.11.2012 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:
அஸ்லம் பாஷா: சென்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் கந்து வட்டி, லாட்டரி சீட்டு சூதாட்டம் போன்றவற்றை ஒழிப்பதற்கு கடுமையான சட்டங்களை நீங்கள் கொண்டுவந்து அமல்படுத்தினீர்கள். அதைபோன்று இன்றைக்குத் தமிழகத்திலே மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டுமென்று அனைத்துத் தரப்பு மக்களாலும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கின்றது. நிச்சயமாக நீங்கள் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அதன் வருவாயை ஈடு கட்டும் வகையில் இயற்கை வளமான கிரானைட், தமிழகத்திலே உங்களுக்கு மிகப்பெரிய அளவில் கிடைக்கிறது. அதன்மூலமாக நிச்சயமாக நீங்கள் வருவாய் இழப்பை ஈடுசெய்து கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆம்பூர் பெத்லேகேம் பகுதியில் மேம்பாலம் அமைக்க அஸ்லம் பாஷா MLA கோரிக்கை


2012-2013 ஆம் ஆண்டுக்கான துணை மதிப்பீடுகளுக்கான மானியக் கோரிக்கையின் போது கடந்த 1.11.2012 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:
மாண்புமிகு தலைவர் அவர்களே, அரசு உட்கட்டமைப்பு வசதிக்கு கூடுதலாக 275.68 கோடி ஒதுக்கீடு செய்திருக்கின்றது. இந்த நேரத்திலே ஒரு முக்கியமான கோரிக்கையை நான் வலியுறுத்த கடமைப்பட்டிருக்கின்றேன். என்னுடைய ஆம்பூர் நகரத்திலே மூன்றில் ஒரு பகுதி மக்கள் வசிக்கக்கூடிய பெத்லேகேம் என்று சொல்லக்கூடிய ஒரு பகுதியில் ஏறத்தாழ 30000 மக்கள் வசித்துவருகிறார்கள். இந்தப் பகுதி அரசு அலுவலகங்கள், கல்லுôரிகள், ஊரின் முக்கிய மருத்துவமனை இருக்கின்ற பகுதி. அந்தப் பகுதியில் இரயில்வே தண்டவாளம் அந்தப் பக்கமாக இருப்பதாலே அவர்களுக்கு வேறு வழி கிடையாது. அந்தக் காணாறு வழியாகத்தான் அவர்கள் செல்ல வேண்டும். நேற்றைக்கு முன்தினம் பெய்த கனத்த மழையின் காரணமாக நேற்று ஒரு நாள் முழுவதும் அந்தப் பகுதிக்கு மக்கள் சென்றுவர முடியவில்லை. மிகுந்த வெள்ளம் அந்தப் பகுதியிலே. ஆகவே, நீண்ட நாள் கோரிக்கையாக சென்ற நிதிநிலை கூட்டத்தொடரின் போது நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனுவினை நான் அளித்திருந்தேன். அவர்களும் அதைப் பரிசீலித்து துறைக்கு அனுப்பி, அதற்கு திட்ட மதிப்பீடும் செய்யப்பட்டுள்ளது. ஆகவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் பரிந்துரை செய்து அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு மேம்பாலத்தை அமைத்துத்தருமாறு இந்த நேரத்திலே ஒரு கோரிக்கையாக வைக்கின்றேன்.

இராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு


இராமநாதபுரத்தில் நேற்று (30-10-2012) அன்று பசும்பொன் இல் தேவர் ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புகளையும் மீறி வன்முறைகள் நிகழ்ந்துள்ளன.
தலித் மக்கள் வாழும் கிராமங்களில் வழியே வாகனங்களில் செல்வதற்கு காவல்துறை தடை விதித்திருந்தது. அதை மீறி முக்குலத்து சமுதாயத்தை சேர்ந்த சிலர் சென்றதாகவும் அதனால் எதிர்தரப்பிலிருந்து தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் ஒரே சமூகத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டதாக தவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் ஒருவர் இராமநாதபுரத்தை சேர்ந்தவர். அவருடைய பிணத்தை ஊர்வலமாக எடுத்து சென்ற சிலர் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பி உள்ளனர். தலித்துகளுக்கு எதிராக கோஷம் போட்டதோடு, சம்மந்தமே இல்லாமல் முஸ்லிம்களுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டுள்ளது.

யான்பு கிளையின் சார்பில் கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி


இறைவனுடைய மாபெரும் கிருபையினால் கடந்த 27-10-2012 சனிக்கிழமையன்று, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - மனிதநேய மக்கள் கட்சி யான்பு கிளையின் சார்பில் கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்க்கு சவூதிஅரேபியா ஜித்தா மேற்குமண்டலச் செயலாளர் காரைக்கால் அப்துல் மஜீத் அவர்களும் யான்பு தொழிலதிபர் சகோ.அக்பா; அலி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சனிக்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பிறகு 8 மணி அளவில், தமுமுக யான்பு கிளையின் துணைத்தலைவர் சகோ.இப்ராஹீம் B.S.C அவர்கள் தலைமையுரை நிகழ்த்தி, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, ஹாபிஸ் அதிரை சலாஹுதீன் அவர்கள் கிராஅத் ஓத நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமாகின. யான்பு கிளையின் மமக செயலாளர் திட்டுவிளை சகோ.முஹம்மது ராபீ DAE அவர்கள் கிளை செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். அண்ணல்நபி(ஸல்) அவர்களை இழிவாக சித்தாக்த்து திரைப்படம் எடுத்த யூத அமெரிக்கர்களுக்கு எதிராக கிளையின் சார்பில் கண்டனத்தை பதிவு செய்தார்.

Wednesday, October 31, 2012

நீலம் புயல் எச்சரிக்கை


வங்க கடலில் உருவாகியுள்ள நீலம் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் புதன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேதாரண்யம் தொடங்கி திருவள்ளூர் வரை கடலோர மாவட்டங்களில் திங்கள் இரவிலிருந்து கன மழை பெய்ந்து வருகிறது. கிணறு, ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள வயல்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புயல் மற்றும் கன மழையை எதிர்கொள்ளும் வகையில் கடலோர மாவட்டங்களில் தமுமுக தொண்டரனியினர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். இப்பகுதிகளில் உள்ள தமுமுக வின் ஆம்புலன்ஸ் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்குமாறு தமுமுகவினர் அறிவுறுத்தப்பட்டுளனர்.

சென்னையில் பெருநாள் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்


இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவையின் சார்பாக சென்னை பிராட்வே டான்பாஸ்கோ பள்ளிக்கூட மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. தமுமுக&மமக மூத்த தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. அவர்கள் ஜும்ஆ பேருரை நிகழ்த்தினார்கள். இந்தப் பெருநாள் தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் தமது உரையில், இப்ராஹிம் (அலை), இஸ்மாயில் (அலை) மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோரின் தியாகங்களை நினைவுகூர்ந்தார்.

Tuesday, October 30, 2012

இளையான்குடியில் பாஜகவின் ரவுடித்தனத்திற்கு பாடம் புகட்டியது தமுமுக - பத்திரிக்கை செய்திகள்



> பொதுக்கூட்டத்தில் மனம்போனபடி கீழ்த்தரமாகப் பேசுவதும், தட்டிக்கேட்க ஆளில்லாததால் தறுதலைப் பேச்சுகளை மென்மேலும் வளர்ப்பதும்தான் சங்பரிவாரக் கும்பலின் கடந்தகால வரலாறு.
> காமத்தில் விஞ்சியது கன்னிமேரியா? கதீஜாவா? மணியம்மையா? என்றெல்லாம் அருவறுப்புத் தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்தி, தமிழகத்தில் மதவெறி நெருப்பை இந்து முன்னணி பற்றவைத்தது.
> 1995க்குப் பிறகு தமுமுக இந்தக் கயமைத்தனங்களுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் முற்றுப்புள்ளி வைத்தது.

Monday, October 29, 2012

இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவர்


பட்ணன் ஹாப்ஸா என்றழைக்கப்பட்டவர் மேலப்பாளையம் மவுலவி பி.எம். ஷாஹுல் ஹமீது மிஸ்பாஹி. பேட்டை ரியாளுல் ஜினான் அரபி கல்லூரியில் இஸ்லாமியக் கல்வி பயின்ற மவ்லவி பி.எம். ஷாஹுல் ஹமீது மிஸ்பாஹி அவர்கள். 1963ஆம் ஆண்டு நீடூர் மிஸ்பாவுல்ஹுதா அரபி கல்லூரியில் பட்டம் பெற்றார். சிறிது காலம் கிளியனூர் அரபி கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பிறந்த ஊரிலேயே மார்க்கப்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டவுடன் அங்கிருந்து விலகினார். மேலப்பாளையம் வி.எஸ்.டி. வக்பு அலல் அவ்லாதினர் நடத்திய மதரஸாவில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

குவைத் தமுமுக -மமக வின் கைதான் கிளைசார்பாக நடந்த தியாக திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி


குவைத் தமுமுக -ம ம க கைதான் கிளை சார்பாக இன்று 26 .,10 .2012 வெள்ளி கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பிறகு முர்காபில் உள்ள கன்னியாகுமரி உணவகத்தில் வைத்து ஈத்மிலன் -பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இறைவனின் மாபெரும் கிருபையால் கிளை தலைவர் (பரங்கி பேட்டை) ஹாஜா மக்தும் அவர்கள் தலைமையில் நடந்தது,
மிஸரப் கிளை செயற்குழு உறுப்பினர் (திருமுல்லைவாசல்) மொவ்லவி பைசுல் ரகுமான் அவர்கள் திருமறை வசனம் ஓதி கூட்டத்தை தொடங்கி வைத்தார் .
இந்த நிகழ்ச்சியை அழகான முறையில் கல்வி குழு செயலாளர் (முத்துகாப்பட்டி) ஹாஜா மைதின் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

துபாயில் சிறப்புடன் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி


மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் நோக்கில் வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி டெய்ரா பகுதியில் அமைந்துள்ள தமுமுக அலுவலகத்தில் 27.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அமீரகத் துணைத் தலைவர் ஹூசைன் பாஷா நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் அவசியத்தை எடுத்துரைத்தார்.
சவுதி அரேபியாவிலிருந்து வந்திருந்த அஃப்சலுல் உலமா பொறியாளர் ஜக்கரியா அவர்கள், முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு திருக் குர்ஆன், நபிமார்களின் வாழ்க்கை, வரலாற்று குறிப்புகள், பைபிள், இந்துக்களின் வேத நூல்களிலிருந்து பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாக வைத்து கேள்விகளுக்கு பதிலளித்தார். அதனையடுத்து, முஸ்லிம்களும் ஒரு சில விஷயங்களைக் குறித்து விளக்கங்கள் கேட்டு தெளிவுபெற்றனர். புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பொறியாளர் முஹம்மது அவர்கள் தன்னுடைய மன மாறுதலுக்கான காரணத்தையும், அதனுடைய முக்கியத்துவத்தைக் குறித்தும் பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ரியாத் மண்டல தமுமுக துணைப் பொதுச் செயலாளர் நூர் முஹம்மது அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டினை குறித்து பாராட்டினார். நல்ல நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். கலந்துக் கொண்டவர்களுக்கு இஸ்லாம் குறித்த புத்தகங்கள், குறுந்தகடுகள், இரவு உணவு வழங்கப்பட்டன. துபாய் மண்டல தமுமுக சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை மண்டலச் செயலாளர் மதுக்கூர் சிராஜ் தலைமையிலான குழுவினர்கள் வி.களத்தூர் உமர் பாருக், ஹைதர் நசீர், மன்சூர், முஜிப் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி


சமூக அவலம் களைய உறுதி ஏற்போம். தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி:
‘‘தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத்தின் மேண்மையைப் பறைசாற்றும் தினமாகும். சமூக அவலங்களான வன்முறை, வறுமை, சுற்றுச்சூழல், சீர்கேடு, லஞ்ச ஊழல் முறைகேடுகள், மக்களின் ஜீவாதார உரிமைகளை ஆதிக்க சக்திகள் தடுத்தல் உள்ளிட்ட உலகளாவிய தீமைகளை, சமூக அவலங்களைக் களைய நாம் தியாகம் செய்யத் தயாராவோம்.
விட்டுக் கொடுத்தல், தம்மிடம் உரியமை இல்லாதார்க்கு வழங்குதல், உரிமைகளை அறத்தின் வழிநின்று போராடுதல் என்ற அம்சங்களை வீடுதோறும் பரப்பி மானுட சமூகம் மேம்பட அனைவரும் ஒருங்கிணைவோம்’’

முக்கியச் செய்தி


தமிழகத்திற்கு காவிரி நீரை அளிக்கும் உத்தரவு திரும்பப்பெற வேண்டும் என கர்நாடகத்தைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார். அமைச்சரின் இந்தப் பேச்சை மனிதநேய மக்கள் கட்சி கடுமையாகக் கண்டித்ததுடன், 16.10.2012 அன்று திருவாரூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும், 22.10.2012 அன்று நெய்வேலியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திலும், எஸ்.எம்.கிருஷ்ணாவை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங் நீக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.எம்.கிருஷ்ணா இன்று பதவி விலகியுள்ளார்.

பக்ரீத் பண்டிகையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை


மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
வரும் 27.10.2012 சனிக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இப்புனித நாளில் தடையில்லா மின்சாரம் வழங்க மனிதநேய மக்கள் கட்சி கோருகிறது இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்கள் தமிழக மின்சாரத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிபிட்டுள்ளதாவது:

Monday, October 22, 2012

எழும்பூர் பகுதி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மூன்று நாள் ஆட்டோ பிரசாரம் - பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா துவக்கி வைத்தார்.


19-10-2012 அன்று மனிதநேய மக்கள் கட்சி எழும்பூர் பகுதி 61வது வட்டத்தின் சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மூன்று நாள் ஆட்டோ பிரசாரத்தை சட்டமன்ற மமக தலைவர் பேரா. டாக்டர். எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநில துணை தலைவர் குணங்குடி ஆர்.எம். அனீபா மற்றும் மாவட்ட, பகுதி கிளை கழக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நெய்வேலி- அனல் மின்நிலையம் முற்றுகை - 1500 பேர் கைது


காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கினை தரமறுக்கும் கர்நாடக அரசையும், வன்முறையைத் தூண்டும் கன்னட வெறியர்களையும் கண்டித்தும், காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான நீரை வழங்காத கர்நாடகத்திற்கு நெய்வேலி-யில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வ-லியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் தலைமையில் நெய்வே-லி அனல்மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் 22.10.2012 அன்று நடைபெற்றது.
நெய்வேலி- அனல் மின்நிலையத்தின் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மந்தாரகுப்பத்திலி-ருந்து 100க்கும் அதிகமான வாகனத்தில் அனல் மின்நிலையத்தை நோக்கி பேரணியாகப் புறப்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் முதற்கட்டமாக நெய்வேலி- அனல் மின்நிலைய தலைமை அலுவலகத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்போராட்டத்தின் இறுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி, தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம். ஹனிபா, மமக துணை பொது செயலாளர் சரணபாண்டியன் தமுமுக மாநில செயலாளர் தருமபுரி சாதிக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

இதையடுத்து தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நெய்வேலி- அனல் மின்நிலையத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். முற்றுகைக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது 300 குழந்தைகள் 70 பெண்கள் உட்பட 1500 மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் தானாகவே சென்று கைதாகினர்.
இப்பேராட்டத்தில் இறுதியில் கண்டன உரை நிகழ்த்திய ஜே.எஸ்.ரிபாயி அவர்கள்,
‘‘இந்திய ஒருமைப்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கர்நாடக அரசு நடத்திவருகிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காமல் திட்டமிட்டு தடுத்தும் மறுத்தும் வருகிறது. இதனைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஓசூரில் சாலை மறியல் போராட்டத்தையும், கடந்த 19.10.2012 அன்று திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் தலையில் கறுப்பு முன்டாசு கட்டி அறவழிப் போராட்டத்தையும் நடத்தினோம். அதேபோல் தற்போது அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டத்தை நடத்தியுள்ளோம். இம்மாபெரும் போராட்டத்தின் வாயிலாக மத்திய மாநில அரசுக்கு ஒருசில கோரிக்கைகளை வைக்கிறேன்:
1. மத்தியில் ஆட்சி புரியும் காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நியாணீமான தண்ணீரைத் தரமறுக்கும் கர்நாடக அரசுக்கு தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தரக்கூடாது.
2. இந்திய ஜனநாயக நாட்டில் அனைத்து மாநிலத்திற்கும் சமமாக நடக்கவேண்டிய மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என பிரதமரை வ-லியுறுத்தினார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். எஸ்.எம்.கிருஷ்ணா உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
3. காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும்.
4. தமிழகத்தின் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய தண்ணீரை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வ-லியுறுத்த வேண்டும்.
காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் கிடைக்கும்வரை மனிதநேய மக்கள் கட்சி தொடந்து போராடும்’’
இவ்வாறு தமுமுக தலைவர் உரையாற்றினார்.


இன்று நடைபெறும் கடலூர் மாவட்டம் நெய்வேலி அனல் மின்நிலையம் ம.ம.க வின் முற்றுகை போராட்டத்திற்கு கொள்ளுமேடு கிளையில் இருந்து வாகணங்கள் அணிவகுத்த போது...









நெய்வேலி அனல்மின்நிலையம் மாபெரும் முற்றுகை போராட்டம்




இன்று நடைபெறும் கடலூர் மாவட்டம் நெய்வேலி அனல் மின்நிலையம் ம.ம.க வின் முற்றுகை போராட்டத்திற்கு கொள்ளுமேடு கிளையில் இருந்து வாகணங்கள் அணிவகுத்த போது...


காவிரி நதி நீரின் உரிய பங்கினை தமிழகத்திற்கு தர மறுக்கும் கர்நாடகாவுக்குநெய்வேலியில் இருந்து மின்சாரம் தரக்கூடாது எனக்கோரி நெய்வேலியில் மாபெரும் அனல் மின் நிலைய முற்றுகை போர், தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் 100 கும் அதிகமான வாகனங்களில் மமகவினர் படையெடுப்பு

Sunday, October 21, 2012

நெய்வேலியில் மமக நடத்தும் முற்றுகை போர்



நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு அக்டோபர் 22 காலை 11 மணிக்கு (இன்ஷா அல்லாஹ்)

காவிரி நதி நீரின் உரிய பங்கினை தமிழகத்திற்கு தர மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் கொடுக்காதே !
எனக்கோரி நெய்வேலியில் மாபெரும் அனல் மின் நிலைய முற்றுகை போர், தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெறும்.

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரித்து வாரீர்...
அழைக்கிறது மனிதநேய மக்கள் கட்சி,,,

தமுமுக நியமனம்


தமுமுகவின் மாநில செயலாளராக A.S.M. ஜுனைத் அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இவண்,
ப. அப்துல் சமது (பொதுச்செயலாளர், தமுமுக)

மமக நியமனம்


மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக மண்டலம் S.M. ஜைனுலாபுதீன், மௌலா நாசர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவண்,
எம். தமிமுன் அன்சாரி (பொதுச்செயலாளர், மமக)

திருப்பூரில் மாணவர் இந்தியா நேர்காணல்......


நாளை (21-10-2012) திருப்பூர் மாநகர மாவட்டத்திற்கான மாணவர் இந்தியாவின் நிர்வாகிகளை தேர்வு செய்ய மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி திருப்பூர் வருகிறார். காலை 11 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமுமுக துணை பொதுச்செயலாளர் கோவை உம்மர், மாநில செயலாளர் கோவை செய்யது ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள்             9543861618      என்ற என்னில் தொடர்பு கொள்ளவும்...

Saturday, October 20, 2012

கொள்ளுமேடு தமுமுக கழக போராளி Z.F முஹம்மது ரிஃபாயி அவர்களின் திருமணம்


‎!!தமுமுகவை தூக்கிப் பிடிப்போம்!! !!கூட்டுத்தலமையைய் போற்றிக்காப்போம்!! "இறைவனின் திருப்பெயரால்" "அஸ்ஸலாமு அலைக்கும்"(வரஹ்) கொள்ளுமேடு தமுமுக கழக போராளி Z.F முஹம்மது ரிஃபாயி அவர்களின் திருமண விழாவை சிறப்பிக்க வருகை தரும் சிறப்ப விருந்தினர் தமுமுகவின் மூத்த தலைவர் மமகவின் சட்ட மன்ற உறுப்பினர் எங்களின் பாசமிகு தலைவர் "MHஜவாஹிருல்லாஹ்"அவர்களே !!வருக!! !!வருக!! இம்மண மக்களை நபிவழியில் சிறப்பிக்க இறைவனிடம் வேண்டுகிறோம், நகர தமுமுக& மமக கழக சொந்தங்கள்