தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Friday, November 2, 2012

இராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு


இராமநாதபுரத்தில் நேற்று (30-10-2012) அன்று பசும்பொன் இல் தேவர் ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புகளையும் மீறி வன்முறைகள் நிகழ்ந்துள்ளன.
தலித் மக்கள் வாழும் கிராமங்களில் வழியே வாகனங்களில் செல்வதற்கு காவல்துறை தடை விதித்திருந்தது. அதை மீறி முக்குலத்து சமுதாயத்தை சேர்ந்த சிலர் சென்றதாகவும் அதனால் எதிர்தரப்பிலிருந்து தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் ஒரே சமூகத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டதாக தவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் ஒருவர் இராமநாதபுரத்தை சேர்ந்தவர். அவருடைய பிணத்தை ஊர்வலமாக எடுத்து சென்ற சிலர் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பி உள்ளனர். தலித்துகளுக்கு எதிராக கோஷம் போட்டதோடு, சம்மந்தமே இல்லாமல் முஸ்லிம்களுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டுள்ளது.

இன்று கொலையாளிகளை கைது செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்களில் சிலர் ஆயுதங்களோடு விரட்டியிருக்கிரார்கள்.
இதனிடையே முஸ்லிம்களின் கடைகளை தாக்கி கொள்ளயடிக்கப்போவதாக தகவல்கள் பரவின. முஸ்லிம்கள், தலித்துகள் ஆகியோரோடு சுமூக உறவை விரும்பும் கணிசமான முக்குலத்து மக்கள் இராமநாதபுரத்தில் வன்முறை ஏற்படாமல் இருக்க ஒத்துழைப்பு தந்தனர். அதன் விளைவாக பெரிய அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதில் காவி விஷமிகள் சிலர் முக்குலத்தோர், தலித் மோதலை விரிவுபடுத்தி முஸ்லிம்களை வம்ம்புக்கு இழுக்கும் வேலைகளை செய்துள்ளனர். ஹனீபா துணிக்கடையின் கண்ணாடிகளை உடைத்தவர்கள் முஸ்லிம்களின் வீடு ஒன்றையும் கல் வீசி தாக்கி உள்ளனர். ஒரு பெட்ரோல் பங்க்கையும் உடைத்துள்ளனர். செய்தி அறிந்த மமக வின் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளோடு பேசி அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது இராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. 5 மாவட்ட எஸ்.பி க்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மாவட்டம் எங்கும் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு தமுமுக தரப்பில் முழு ஒத்துழைப்பு தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று மாலையிலிருந்து தென் மாவட்டம் முழுவதும் வாகன போக்குவரத்துகள் தடைபட்டிருக்கின்றன. நாளை முதல் நிலை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment