தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Tuesday, July 2, 2013

கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரம்..

கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக சார்பில் ஜுலை 6 தமுமுக கோரிக்கை பேரணி குறித்த தெருமுனை பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா அவர்கள் ஆயங்குடி கொள்ளுமேடு உள்ளிட்ட இடங்களில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
மாவட்ட அமைப்புக் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட தமுமுக கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




படங்கள் :நன்றி : ஆயங்குடி ஹஜ்ஜி முஹம்மது

Saturday, June 15, 2013

M.I.ஜபருல்லாஹ் - சைலா பானு திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}  வாழ்த்துக்களுடன்..கொள்ளுமேடு தமுமுக

Tuesday, June 11, 2013

இன்ஷா அல்லாஹ் லால்பேட்டையில் இலவச மருத்துவ முகாம் நடைபெறும்.


ஜூலை 6 த.மு.மு.க.தலைமையில் நடைபெறும் முஸ்லிம்களின் கோரிக்கை பேரணி வெற்றி பெறவும் ,

லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வர் அரபிக்கல்லுரியின் 150ம் ஆண்டுவிழாவிற்கு வாழ்த்து கூறும் விதமாகவும், 

13.06.2013 வியாழன் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 
லால்பேட்டை த.மு.மு.க அலுவலகத்தில் 

லால்பேட்டை த.மு.மு.க &புதுச்சேரி வெங்கடேஷ்வரா மருத்துவ கல்லுரி இணைந்து நடத்தும். 

இலவச மருத்துவ முகாம் நடைபெறும் .

பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய கேட்டுகொள்கிறது 

லால்பேட்டை நகர த.மு.மு.க.

Thursday, May 23, 2013

இன்ஷா அல்லாஹ் லால்பேட்டையில் மாணவர் நல்லொழுக்க பயிற்ச்சி(தர்பி­யா) முகாம்.

இன்ஷா அல்லாஹ்....

லால்பேட்டையில் மாணவர் நல்லொழுக்க பயிற்ச்சி(தர்பி­யா) முகாம்.
இடம் :JMA திருமணம் மண்டபம் கொத்தவால் 
தெருநாள் :25.05.2013 (சனிகிழமை)சுபுஹ­ு தொழுகை முதல்மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய அழைக்கிறதுலால்பேட்டை நகர த.மு.மு.க

Wednesday, May 1, 2013

கோவை சிறைவாசி அபுதாகிரை விடுதலைச் செய்ய வேண்டும் - சட்டபேரவையில் ம.ம.க. கோரிக்கை

குரூப்-1 தேர்வுகளில் உச்சபட்ச வயதுவரம்பை 45 ஆக மாற்றிட வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை பெற்ற அனைத்து கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டும், செங்கல்பட்டு முகாம்களை மூடிவிட்டு அங்குள்ளவர்களை கும்மிடிபூண்டி மற்றும் மண்டபம் போன்ற திறந்தவெளி முகாம்களுக்கு மாற்ற வேண்டும்
30.04.2013 அன்று 2013-2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் நீதி நிருவாகம், சட்டத் துறை, சிறைச்சாலைகள், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் துறை மானியக் கோரிக்கையில் பங்கு கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிசி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி மற்றும் சிறுபான்மையினர் அனைத்துப் பிரிவினருக்கும் 35 வயது என்று நிர்ணயம் செய்துள்ளது. பொதுப்பிரிவினருக்கு 30 வயது என நிர்ணயம் செய்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை பெற்ற அனைத்து கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் - மமக கோரிக்கை


30.04.2013 அன்று 2013-2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் நீதி நிருவாகம், சட்டத் துறை, சிறைச்சாலைகள், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் துறை மானியக் கோரிக்கையில் பங்கு கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிசி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி மற்றும் சிறுபான்மையினர் அனைத்துப் பிரிவினருக்கும் 35 வயது என்று நிர்ணயம் செய்துள்ளது. பொதுப்பிரிவினருக்கு 30 வயது என நிர்ணயம் செய்துள்ளது.

இந்தத் தேர்வு யுபிஎஸ்சி-ஐப்போல் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவதில்லை ஒரு முறை அறிவிப்பு செய்து தேர்வு நடத்தி, பணி நியமனம் பெறுவதற்கு 3 ஆண்டுகள் ஆகின்றது ஆகவே குறைந்த வாய்ப்புகளே பெறுவதற்கான சூழ்நிலை இருப்பதால், நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுகளில் உச்சபட்ச வயதுவரம்பை 45 ஆக மாற்றிட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மரக்காணம் கலவரம் தொடர்பாக பேரா எம் எச் ஜவாஹிருல்லா கொண்டுவந்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் போது ஆற்றிய உரை:


29.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் மரக்காணம் கலவரம் தொடர்பாக பேரா எம் எச் ஜவாஹிருல்லா கொண்டுவந்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் போது ஆற்றிய உரை:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த 25 ஆம் தேதி மரக்காணம் பகுதியிலே நடைபெற்றது உண்மையிலேயே மிகவும் துயரமான சம்பவமாக விளங்குகிறது. குடிசைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன: கூனிமேடிலே உள்ள பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடைபெற்றிருக்கின்றது. அரசு பேருந்துகளும் எரிக்கப்பட்டு ஒரு பதற்றமான சூழல் உருவாயியிருப்பது நாம் அனைவரும் அறிந்தது. இதற்கு முக்கிய காரணமாக நாங்கள் கருதுவது, வெறுப்புணர்வை ஊட்டக்கூடிய பேச்சுகள், சாதி மோதல்களாக இருக்கட்டும் அல்லது வகுப்புவாத மோதல்களாக இருக்கட்டும், இவற்றுக்கு அடிப்படையாக விளங்குவது எந்தவிதமான வரம்பும் இல்லாமல் பொறுப்புணர்வும் இல்லாமல் மேடைகளிலே பிற சாதியினரையும், மதத்தைச் சார்ந்தவர்களையும் புண்படுத்தக்கூடிய வகையிலே அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய வகையிலே உரைகள் ஆற்றப்பட்டு வருகின்றன. எதிர்காலத்திலே, இதுபோன்ற வெறுப்புணர்வைத் தூண்டக்கூடிய பேச்சுகளை யார் பேசினாலும் அவர்கள்மீது அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். நிச்சயமாக இந்த அரசு பாரபட்சம் இல்லாமல் கடந்த காலங்களிலே கையாண்டிருக்கின்றது. எதிர்காலத்திலும் அப்படி கையாளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகை நடைபெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டபேரவையில் மமக வலியுறுத்தல்


25.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும்
வேலூர் கோட்டையிலே அகழ்வாராய்ச்சித் துறையினரால் பராமரிக்கப் படக்கூடிய கோட்டையிலே சர்ச் இருக்கிறது. அங்கே வழிபாடு நடக்கிறது. அங்கே ஜகதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. அங்கேயும் வழிபாடு நடக்கிறது. அங்கே இருக்கக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிகுந்த பள்ளிவாசலிலும் வழிபாடு நடத்தவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொப்பரைக்கான கொள்முதல் விலையை 70 ரூபாயாக உயர்த்த வேண்டும் :சட்டபேரவையில் மமக கோரிக்கை


30.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும்
முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: இராமநாதபுரம் மாவட்டத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ய அரசு ஆவன செய்யுமா?
மாண்புமிகு திரு.செ.தாமோதரன்(வேளாண்மைத் துறை அமைச்சர்: இராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவான 8383 ஹெக்டேரில் மட்டும் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. 836 இலட்சம் தேங்காய்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருவதாலும், இதுவரை கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் அங்கே தொடங்கப் படவில்லை இருப்பினும் கொப்பரைவரத்தின் அடிப்படையில், தேவை ஏற்படும் பட்சத்தில் முறையான கருத்துரு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் பெறப்பட்டு, TANFED நிறுவனம் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் தொடங்குது குறித்து முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு பரிசீலனை செய்யும் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தவறான செய்திக்கு தினமலர் வருத்தம்!


Friday, April 26, 2013

சட்டப் பேரவையில் மமக கோரிக்கை


முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர வேண்டும்,
பெங்களுர் குண்டு வெடிப்பு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதை தடுக்க வேண்டும்,
மத்திய அரசுக்கு இணையாக நிதியளித்து மாநில அரசு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்,
பாரதிய ஜனதா எம்.ஆர். காந்தி மீது தாக்குதல் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்யப்பட வேண்டும் என சட்டப் பேரவையில் மமக கோரிக்கை
26.04.2013 அன்று 2013-2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் பங்கு கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:

பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்-சட்டப் பேரவையில் மமக கோரிக்கை


முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தேசிய நெடுஞ்சாலை 49--ருந்து புதுமடம் செல்லக்கூடிய சாலை நீண்டகாலமாக பழுதடைந்துள்ளது அதை சீர் செய்வதற்கான திட்ட ஒதுக்கீடுகளெல்லாம் செய்த பிறகும்கூட, அந்தப் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கின்றது. இதுகுறித்து அதிகாரிகளிடம் வினவும்போது, ஒரு Package System த்தில் இந்தச் சாலைகளை போடுகிறோம். அதனால் தாமதமாகும் என்று சொல்கிறார்கள். எனவே, விரைவிலே இந்தச் சாலையைப் போடுவதற்கு இந்த அரசு முன்வருமா என்று வினவ விரும்புகிறேன்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்


தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா கொண்டுவந்த கவனஈர்ப்பு தீர்மானம்
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த மார்ச் 23 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக டைஆக்சைடு வெளியேறியதைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலே பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள், மரத்தில் உள்ள இலைகள்கூட காய்ந்துபோகக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டதை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிட்டதற்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மகாராஸ்டிரா மாநிலம் இரத்தினகிரியில் இந்த ஆலை தொடங்கப்பட்டபோது அங்கே மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தி, அங்கே மூடினார்கள். அதற்குப் பிறகு கோவாவிற்குச் சென்றார்கள் அங்கும் அனுமதி மறுக்கப்ட்டது அதற்குப்பிறகு குஜராத்திலும் அனுமதி மறுக்கப்பட்ட சூழ்நிலையில்தான் தமிழ்நாட்டில் அந்த ஆலை தொடங்கப்பட்டு எனக்கு முன்பு பேசிய மாண்புமிகு உறுப்பினர் திரு.சவுந்தரரசான் அவர்கள் நிலைமைகளையெல்லாம் சொன்னார்கள், என்னுடைய கேள்வி என்னவென்றால், ஸ்டெர்லைட் ஆலை பக்கத்தில் இருக்கக்கூடிய குடிநீர் எல்லாம் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு இலக்காகி, அமெரிக்க சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மார்க் செரோனி என்பவர் இந்தத் தண்ணீரை குடித்தால் மனிதர்களுக்கு கேன்சர் ஏற்படும், கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று அறிக்கைக் கொடுத்திருக்கிறார்கள்.

Monday, April 22, 2013

அன்பார்த்த கொள்ளுமேடு சகோதர்களே நமதூரில் அமைதியும்,ஒற்றுமையும் எங்கே சென்றது ?

அன்பிற்கினிய கொள்ளுமேடு சகோதரர்களுக்கு,

                       அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ் 


இந்த கடிதம் இஸ்லாமிய சிந்தனையோடும், பொதுநலத்தோடும், நடுநிலை சிந்தனையோடும் உங்கள் அனைவரையும் சந்திக்கட்டுமாக.

அன்பு சகோதரர்களே!

இந்தச் சமுதாயம் கருத்துவேறுபாடுகள் நிறைந்த சமுதாயமாகும். முஸ்லிம்களுக்கிடையிலான இந்த கருத்து வேறுபாடுகள் கியாமத் நாள்வரை இருக்கக்கூடியது! அனைவரும் ஒருமித்தக் கருத்தையுடைய சமுதாயமாக மாறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமானதன்று! எனவே எனது கருத்துக்கு ஒருவர் மாறுபட்டிருக்கின்றார் என்பதற்காக அவர் ஏக இறைவனை மட்டுமே வழிபடும் முஸ்லிமாக இருந்தும் அவரை கேவலமாக விமர்சிப்பது என்பது ஒரு உண்மையான முஃமினுக்கு உரிய பண்பாக இருக்கமுடியாது! ‘ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமுடைய கண்ணியத்தைக் களங்கப்படுத்துவது ஹராமாகும்’ என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நாம் எக்கணமும் மறந்துவிடக்கூடாது.

தமுமுகவின் கோடை கால மாணவர் முகாம் ஏப்ரல் 27ல் தொடங்குகிறது


தமுமுக மாணவர் அணியின் சார்பில் கோடை கால இஸ்லாமிய பண்பியல் பயிற்சி முகாம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற உள்ளது.
முதலாவதாக ஏப்ரல் 27 தொடங்கி மே 1 வரை விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் நடைபெற இருக்கிறது. இதில் விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.
இரண்டாவது முகாம் நாகூரில் ஏப்ரல் 29 தொடங்கி மே 2 வரை நடைபெற இருக்கிறது. இதில் நாகை தெற்கு, நாகை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை வடக்கு, காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமைய சட்டமன்றத்தில் குரல் ஒலித்தது



தமிழக சட்டமன்றதில் லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமைய குரல் எழுப்பிய காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு ந.முருகுமாரன் அவர்களுக்கு நன்றி !நன்றி !!நன்றி !!!

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமையவேண்டும் என்று லால்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது
லால்பேட்டை த.மு.மு.க வும் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது

15.12.2012 மாலை லால்பேட்டை நகர தமுமுக, மமக பொதுக்குழு கூட்டத்தில் லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உருவாக சில தடைகள் உள்ளதால் அதை தகர்தெரிய உணர்வுமிகு போராட்டம் நடத்தப்படும்.என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது அதனை தொடர்ந்து அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் முறையாக கோரிக்கை மனு அனப்பபட்டது.
பள்ளி அமைவதில் தொடர்ந்து கால தாமதம் ஏற்ப்பட்டதால் 20.03.2013 அன்று நடந்த நகர த.மு.மு.க நிர்வாக குழு கூட்டத்தில் முதல் கட்டமாக சுவரொட்டிகள் ஓட்டுவது என்று முடிவெடுக்க பட்டது. அதனை தொடர்ந்து 21.03.2013 அன்று லால்பேட்டை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

ஜூலை 6ல் கோட்டையை நோக்கி முஸ்லிம்களின் கோரிக்கைப் பேரணி - தமுமுக அறிவிப்பு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்களின் தலைமையில் 11.04.2013 அன்று நடைபெற்றது. அதில்,
தமிழகத்தில் முஸலிம்களுக்கு தற்போது அமலில் உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரித்து தரக் கோரியும்,
10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் வாடும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கக் கோரியும்,
திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தங்கள் கோரியும்,

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுதிரண்டு எதிர்வரும் ஜூலை 6 (சனிக்கிழமை) அன்று தலைநகர் சென்னையில் கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அன்புடன்
(ப. அப்துல் சமது)
பொதுச் செயலாளர்

முஸ்லிம் மாணவிகளுக்கு சென்னையில் மாணவியர் விடுதிகள் அமைக்க வேண்டும்



08.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும்
முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: சென்னையில் சிறுபான்மையினர் நலத்துறை கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் அமைக்க அரசு முன்வருமா?
மாண்புமிகு முஹம்மத் ஜான்(பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்): மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே சிறுபான்மையின சமுதாயத்திற்கு 8 விடுதிகளை அளித்தார்கள், அதில் ஒரு விடுதியை சென்னை இராயப்பேட்டையில் கல்லூரி மாணவியர்கள் 100 பேர் தங்கிப் படிக்கும் வகையில் துவங்குவதற்காக ஆணையிட்டுள்ளார்கள், இந்த ஆண்டு முதல் இந்த விடுதி செயல்படத் தொடங்கும், தற்போது சென்னையில் சிறுபான்மையின கல்லூரி மாணவியர் விடுதிகள் தொடங்குவது குறித்து கருத்துரு எதுவும் தற்சமயம் அரசின் பரிசீலனையில் இல்லை, இருப்பினும் சென்னையில் உள்ள 8 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் அவர்கள் தங்கி கல்விப் பயில சிறுபான்மையின மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

லால்பேட்டை த,மு.மு.க சார்பில் மருத்துவ உதவி....



லால்பேட்டை வடக்கு தெருவில் வசிக்கும் ஹபீபுல்லா.அவர்கள் .கடந்த சில நாட்களாக சிறுநீரகம் கோலாரால் அவதிப்பட்டு வருகிறார் .
அவரை நகர தலைவர் முஹமது ஹாரிஸ் 
நகர த.மு.மு.க.செயலாளர் நூருல் அமீன் 
நகர பொருளாளர் நவ்வர் ஹுசைன்
நகர துணை செயலாளர் ஹபிபுர்ரஹ்மான்
நகர மாணவர் அணி செயலாளர் முஹமது ஷபீக் ஆகியோர்
நேரில் சென்று நலம் விசாரித்து அவரிடம் மருத்துவத்திற்காக
த.மு.மு.க சார்பில் ரூ 25 ஆயிரம் உதவி வழங்கினார்கள்.

M.R. நஜ்முத்தீன் M.ஆசியா பர்வின் திருமணம்



 இன்ஷா அல்லாஹ்... 07.04.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை ஜாக்கிர் வருகைதரயிருக்கிரார்கள்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}  வாழ்த்துக்களுடன்..A.அன்சர்அலி K.இம்தியாஸ் S. பைசல்  V.அஹமது B.com.,  M.Z.ல்மான் B.sc.,  

Saturday, March 30, 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல்: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:

தூத்துக்குடி மாவட்ட மக்களை மிகவும் அச்சுரித்தி வந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் இழுத்து மூடியிருப்பது மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.

கடந்த மார்ச் 23 தேதி அத்தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு மக்களை பீதிக்குள்ளாக்கியது அடுத்து ஒரு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பாக தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி பாராட்டுகிறது.

சவூதி நிதாகத் சட்டம்: இந்தியர்களின் வேலை இழப்பை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தமுமுக கோரிக்கை


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
சவூதி அரேபியாவில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை சவூதியிலிருந்து திருப்பி அனுப்ப சவூதி அரசு முடிவுசெய்துள்ளது. இதனால் 20 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் வேலைவாய்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் வெளி நாட்டவர்களை கண்டறியும் நோக்கில் ஆயிரக்கானக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை சோதனை என்ற பெயரால் நிதாகத் என்ற சட்டத்தின் கீழ் சவூதி அரசு கைது செய்துவருகிறது. இந்த சட்டதினால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.