தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Wednesday, December 5, 2012

டிச 6 – தமுமுக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் புவனகிரி யில் நடைப்பெறும்


பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6ல் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும் ஆகிய இரட்டைக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடலூர் மாவட்ட {தெர்கு} சார்பாக  காட்டுமன்னார்குடியில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தது.
தர்போது 01.12.2012 முதல் 10.12.2012 வரை காட்டுமன்னார்குடி பகுதியில் 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது தடையை மீறி காட்டுமன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என்று தலைமை நிர்வாகம் கூரியதால் சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரி யில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடலூர் மாவட்ட {தெர்கு} சார்பாக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெரும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Saturday, December 1, 2012

முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் இரங்கல் செய்தி:
முன்னாள் பிரதமரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஐ.கே.குஜ்ரால் அவர்களின் மறைவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
வி.பி.சிங் அவர்களின் அரசியல் எழுச்சியின் மூலமாக அரசிய-ல் அறிமுகமானவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஐ.கே.குஜ்ரால் அவர்கள் முதன்மையானவர்.
வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் இருந்தபோது அண்டைய நாடுகளுடன் சுமூக உறவை பலப்படுத்துவதில் அக்கறைக் காட்டினார். இவர் பிரதமராக இருந்த காலத்தில் ஊழலுக்கு இடம்கொடுக்காமல், மதச்சார்பற்ற அரசியலை சிறப்பாக வழிநடத்தினார்.
எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் பொதுவாழ்வை நகர்த்தியவரின் உயிர் இன்று முற்றுப்பெற்றுள்ளது. அரிதான அரசியல் தலைவர்களில் ஒருவரான இவரது இழப்பு இந்தியாவிற்குப் பேரிழப்பாகும்.

சிறைவாசி அபுதாகிர் விடுதலைக்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து உயிருக்கு போராடிவரும் சிறைவாசி சகோதரர் அபுதாகிர்... நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோசமாகிவருகிறது... சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன... கண்பார்வை வேகமாக குறைந்துவருகிறது... வலதுகால் மூட்டுக்கு கீழ் கொப்புளங்கள் இரத்தமும் சீளுமாக அவருக்கு மிகுந்த வேதனையை தருகிறது.
உயிரின் இறுதி கட்டத்தில் இருக்கும். உயர் சிகிச்சைக்காக அவரை நீதி மன்றம் 90 நாள் பரோல் கொடுத்தும் அதை மதிக்காமல் தமிழக அரசு இன்னும் அவரை மருத்துவ் மனையில் வைத்து சிறை படுத்தி உள்ளனர்.

சிறைவாசி அபுதாகிர் உயிருக்கு போராட்டம் - நீதிக்கான போராட்டம்


கோவை சிறையில் கடந்த 14 ஆண்டுகளாக வாடிக்கொண்டு இருக்கும் சிறைவாசி அபுதாகிர் என்பவர் இரு சிறுநிரகமும் பாதிக்கப்பட்டு இதய நோய்க்கும் உள்ளாகி பார்வை குறைபாடும் ஏற்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்... கடந்த 11 மாதங்களாக சிகிச்சைக்காக பரோல் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டுள்ளதால் நோயின் பாதிப்பு அதிகமாகி அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது.
மேலும் இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் சிறுபான்மை அறக்கட்டளை வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 24 -08 -12 அன்று சிறைவாசி அபுதாகிர் 30 -08 -2012 அன்றில் இருந்து பரோலில் விட உள்துறை செயலாளருக்கு உத்தரவு இட்டு இருந்தது. எனினும் அபுதஹிரை சிறையில் வைத்துள்ளது ...