தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Wednesday, October 31, 2012

நீலம் புயல் எச்சரிக்கை


வங்க கடலில் உருவாகியுள்ள நீலம் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் புதன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேதாரண்யம் தொடங்கி திருவள்ளூர் வரை கடலோர மாவட்டங்களில் திங்கள் இரவிலிருந்து கன மழை பெய்ந்து வருகிறது. கிணறு, ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள வயல்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புயல் மற்றும் கன மழையை எதிர்கொள்ளும் வகையில் கடலோர மாவட்டங்களில் தமுமுக தொண்டரனியினர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். இப்பகுதிகளில் உள்ள தமுமுக வின் ஆம்புலன்ஸ் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்குமாறு தமுமுகவினர் அறிவுறுத்தப்பட்டுளனர்.

சென்னையில் பெருநாள் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்


இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவையின் சார்பாக சென்னை பிராட்வே டான்பாஸ்கோ பள்ளிக்கூட மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. தமுமுக&மமக மூத்த தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. அவர்கள் ஜும்ஆ பேருரை நிகழ்த்தினார்கள். இந்தப் பெருநாள் தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் தமது உரையில், இப்ராஹிம் (அலை), இஸ்மாயில் (அலை) மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோரின் தியாகங்களை நினைவுகூர்ந்தார்.

Tuesday, October 30, 2012

இளையான்குடியில் பாஜகவின் ரவுடித்தனத்திற்கு பாடம் புகட்டியது தமுமுக - பத்திரிக்கை செய்திகள்



> பொதுக்கூட்டத்தில் மனம்போனபடி கீழ்த்தரமாகப் பேசுவதும், தட்டிக்கேட்க ஆளில்லாததால் தறுதலைப் பேச்சுகளை மென்மேலும் வளர்ப்பதும்தான் சங்பரிவாரக் கும்பலின் கடந்தகால வரலாறு.
> காமத்தில் விஞ்சியது கன்னிமேரியா? கதீஜாவா? மணியம்மையா? என்றெல்லாம் அருவறுப்புத் தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்தி, தமிழகத்தில் மதவெறி நெருப்பை இந்து முன்னணி பற்றவைத்தது.
> 1995க்குப் பிறகு தமுமுக இந்தக் கயமைத்தனங்களுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் முற்றுப்புள்ளி வைத்தது.

Monday, October 29, 2012

இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவர்


பட்ணன் ஹாப்ஸா என்றழைக்கப்பட்டவர் மேலப்பாளையம் மவுலவி பி.எம். ஷாஹுல் ஹமீது மிஸ்பாஹி. பேட்டை ரியாளுல் ஜினான் அரபி கல்லூரியில் இஸ்லாமியக் கல்வி பயின்ற மவ்லவி பி.எம். ஷாஹுல் ஹமீது மிஸ்பாஹி அவர்கள். 1963ஆம் ஆண்டு நீடூர் மிஸ்பாவுல்ஹுதா அரபி கல்லூரியில் பட்டம் பெற்றார். சிறிது காலம் கிளியனூர் அரபி கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பிறந்த ஊரிலேயே மார்க்கப்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டவுடன் அங்கிருந்து விலகினார். மேலப்பாளையம் வி.எஸ்.டி. வக்பு அலல் அவ்லாதினர் நடத்திய மதரஸாவில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

குவைத் தமுமுக -மமக வின் கைதான் கிளைசார்பாக நடந்த தியாக திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி


குவைத் தமுமுக -ம ம க கைதான் கிளை சார்பாக இன்று 26 .,10 .2012 வெள்ளி கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பிறகு முர்காபில் உள்ள கன்னியாகுமரி உணவகத்தில் வைத்து ஈத்மிலன் -பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இறைவனின் மாபெரும் கிருபையால் கிளை தலைவர் (பரங்கி பேட்டை) ஹாஜா மக்தும் அவர்கள் தலைமையில் நடந்தது,
மிஸரப் கிளை செயற்குழு உறுப்பினர் (திருமுல்லைவாசல்) மொவ்லவி பைசுல் ரகுமான் அவர்கள் திருமறை வசனம் ஓதி கூட்டத்தை தொடங்கி வைத்தார் .
இந்த நிகழ்ச்சியை அழகான முறையில் கல்வி குழு செயலாளர் (முத்துகாப்பட்டி) ஹாஜா மைதின் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

துபாயில் சிறப்புடன் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி


மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் நோக்கில் வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி டெய்ரா பகுதியில் அமைந்துள்ள தமுமுக அலுவலகத்தில் 27.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அமீரகத் துணைத் தலைவர் ஹூசைன் பாஷா நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் அவசியத்தை எடுத்துரைத்தார்.
சவுதி அரேபியாவிலிருந்து வந்திருந்த அஃப்சலுல் உலமா பொறியாளர் ஜக்கரியா அவர்கள், முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு திருக் குர்ஆன், நபிமார்களின் வாழ்க்கை, வரலாற்று குறிப்புகள், பைபிள், இந்துக்களின் வேத நூல்களிலிருந்து பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாக வைத்து கேள்விகளுக்கு பதிலளித்தார். அதனையடுத்து, முஸ்லிம்களும் ஒரு சில விஷயங்களைக் குறித்து விளக்கங்கள் கேட்டு தெளிவுபெற்றனர். புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பொறியாளர் முஹம்மது அவர்கள் தன்னுடைய மன மாறுதலுக்கான காரணத்தையும், அதனுடைய முக்கியத்துவத்தைக் குறித்தும் பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ரியாத் மண்டல தமுமுக துணைப் பொதுச் செயலாளர் நூர் முஹம்மது அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டினை குறித்து பாராட்டினார். நல்ல நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். கலந்துக் கொண்டவர்களுக்கு இஸ்லாம் குறித்த புத்தகங்கள், குறுந்தகடுகள், இரவு உணவு வழங்கப்பட்டன. துபாய் மண்டல தமுமுக சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை மண்டலச் செயலாளர் மதுக்கூர் சிராஜ் தலைமையிலான குழுவினர்கள் வி.களத்தூர் உமர் பாருக், ஹைதர் நசீர், மன்சூர், முஜிப் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி


சமூக அவலம் களைய உறுதி ஏற்போம். தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி:
‘‘தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத்தின் மேண்மையைப் பறைசாற்றும் தினமாகும். சமூக அவலங்களான வன்முறை, வறுமை, சுற்றுச்சூழல், சீர்கேடு, லஞ்ச ஊழல் முறைகேடுகள், மக்களின் ஜீவாதார உரிமைகளை ஆதிக்க சக்திகள் தடுத்தல் உள்ளிட்ட உலகளாவிய தீமைகளை, சமூக அவலங்களைக் களைய நாம் தியாகம் செய்யத் தயாராவோம்.
விட்டுக் கொடுத்தல், தம்மிடம் உரியமை இல்லாதார்க்கு வழங்குதல், உரிமைகளை அறத்தின் வழிநின்று போராடுதல் என்ற அம்சங்களை வீடுதோறும் பரப்பி மானுட சமூகம் மேம்பட அனைவரும் ஒருங்கிணைவோம்’’

முக்கியச் செய்தி


தமிழகத்திற்கு காவிரி நீரை அளிக்கும் உத்தரவு திரும்பப்பெற வேண்டும் என கர்நாடகத்தைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார். அமைச்சரின் இந்தப் பேச்சை மனிதநேய மக்கள் கட்சி கடுமையாகக் கண்டித்ததுடன், 16.10.2012 அன்று திருவாரூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும், 22.10.2012 அன்று நெய்வேலியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திலும், எஸ்.எம்.கிருஷ்ணாவை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங் நீக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.எம்.கிருஷ்ணா இன்று பதவி விலகியுள்ளார்.

பக்ரீத் பண்டிகையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை


மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
வரும் 27.10.2012 சனிக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இப்புனித நாளில் தடையில்லா மின்சாரம் வழங்க மனிதநேய மக்கள் கட்சி கோருகிறது இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்கள் தமிழக மின்சாரத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிபிட்டுள்ளதாவது:

Monday, October 22, 2012

எழும்பூர் பகுதி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மூன்று நாள் ஆட்டோ பிரசாரம் - பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா துவக்கி வைத்தார்.


19-10-2012 அன்று மனிதநேய மக்கள் கட்சி எழும்பூர் பகுதி 61வது வட்டத்தின் சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மூன்று நாள் ஆட்டோ பிரசாரத்தை சட்டமன்ற மமக தலைவர் பேரா. டாக்டர். எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநில துணை தலைவர் குணங்குடி ஆர்.எம். அனீபா மற்றும் மாவட்ட, பகுதி கிளை கழக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நெய்வேலி- அனல் மின்நிலையம் முற்றுகை - 1500 பேர் கைது


காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கினை தரமறுக்கும் கர்நாடக அரசையும், வன்முறையைத் தூண்டும் கன்னட வெறியர்களையும் கண்டித்தும், காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான நீரை வழங்காத கர்நாடகத்திற்கு நெய்வேலி-யில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வ-லியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் தலைமையில் நெய்வே-லி அனல்மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் 22.10.2012 அன்று நடைபெற்றது.
நெய்வேலி- அனல் மின்நிலையத்தின் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மந்தாரகுப்பத்திலி-ருந்து 100க்கும் அதிகமான வாகனத்தில் அனல் மின்நிலையத்தை நோக்கி பேரணியாகப் புறப்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் முதற்கட்டமாக நெய்வேலி- அனல் மின்நிலைய தலைமை அலுவலகத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்போராட்டத்தின் இறுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி, தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம். ஹனிபா, மமக துணை பொது செயலாளர் சரணபாண்டியன் தமுமுக மாநில செயலாளர் தருமபுரி சாதிக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

இதையடுத்து தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நெய்வேலி- அனல் மின்நிலையத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். முற்றுகைக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது 300 குழந்தைகள் 70 பெண்கள் உட்பட 1500 மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் தானாகவே சென்று கைதாகினர்.
இப்பேராட்டத்தில் இறுதியில் கண்டன உரை நிகழ்த்திய ஜே.எஸ்.ரிபாயி அவர்கள்,
‘‘இந்திய ஒருமைப்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கர்நாடக அரசு நடத்திவருகிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காமல் திட்டமிட்டு தடுத்தும் மறுத்தும் வருகிறது. இதனைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஓசூரில் சாலை மறியல் போராட்டத்தையும், கடந்த 19.10.2012 அன்று திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் தலையில் கறுப்பு முன்டாசு கட்டி அறவழிப் போராட்டத்தையும் நடத்தினோம். அதேபோல் தற்போது அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டத்தை நடத்தியுள்ளோம். இம்மாபெரும் போராட்டத்தின் வாயிலாக மத்திய மாநில அரசுக்கு ஒருசில கோரிக்கைகளை வைக்கிறேன்:
1. மத்தியில் ஆட்சி புரியும் காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நியாணீமான தண்ணீரைத் தரமறுக்கும் கர்நாடக அரசுக்கு தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தரக்கூடாது.
2. இந்திய ஜனநாயக நாட்டில் அனைத்து மாநிலத்திற்கும் சமமாக நடக்கவேண்டிய மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என பிரதமரை வ-லியுறுத்தினார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். எஸ்.எம்.கிருஷ்ணா உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
3. காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும்.
4. தமிழகத்தின் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய தண்ணீரை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வ-லியுறுத்த வேண்டும்.
காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் கிடைக்கும்வரை மனிதநேய மக்கள் கட்சி தொடந்து போராடும்’’
இவ்வாறு தமுமுக தலைவர் உரையாற்றினார்.


இன்று நடைபெறும் கடலூர் மாவட்டம் நெய்வேலி அனல் மின்நிலையம் ம.ம.க வின் முற்றுகை போராட்டத்திற்கு கொள்ளுமேடு கிளையில் இருந்து வாகணங்கள் அணிவகுத்த போது...









நெய்வேலி அனல்மின்நிலையம் மாபெரும் முற்றுகை போராட்டம்




இன்று நடைபெறும் கடலூர் மாவட்டம் நெய்வேலி அனல் மின்நிலையம் ம.ம.க வின் முற்றுகை போராட்டத்திற்கு கொள்ளுமேடு கிளையில் இருந்து வாகணங்கள் அணிவகுத்த போது...


காவிரி நதி நீரின் உரிய பங்கினை தமிழகத்திற்கு தர மறுக்கும் கர்நாடகாவுக்குநெய்வேலியில் இருந்து மின்சாரம் தரக்கூடாது எனக்கோரி நெய்வேலியில் மாபெரும் அனல் மின் நிலைய முற்றுகை போர், தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் 100 கும் அதிகமான வாகனங்களில் மமகவினர் படையெடுப்பு

Sunday, October 21, 2012

நெய்வேலியில் மமக நடத்தும் முற்றுகை போர்



நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு அக்டோபர் 22 காலை 11 மணிக்கு (இன்ஷா அல்லாஹ்)

காவிரி நதி நீரின் உரிய பங்கினை தமிழகத்திற்கு தர மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் கொடுக்காதே !
எனக்கோரி நெய்வேலியில் மாபெரும் அனல் மின் நிலைய முற்றுகை போர், தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெறும்.

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரித்து வாரீர்...
அழைக்கிறது மனிதநேய மக்கள் கட்சி,,,

தமுமுக நியமனம்


தமுமுகவின் மாநில செயலாளராக A.S.M. ஜுனைத் அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இவண்,
ப. அப்துல் சமது (பொதுச்செயலாளர், தமுமுக)

மமக நியமனம்


மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக மண்டலம் S.M. ஜைனுலாபுதீன், மௌலா நாசர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவண்,
எம். தமிமுன் அன்சாரி (பொதுச்செயலாளர், மமக)

திருப்பூரில் மாணவர் இந்தியா நேர்காணல்......


நாளை (21-10-2012) திருப்பூர் மாநகர மாவட்டத்திற்கான மாணவர் இந்தியாவின் நிர்வாகிகளை தேர்வு செய்ய மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி திருப்பூர் வருகிறார். காலை 11 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமுமுக துணை பொதுச்செயலாளர் கோவை உம்மர், மாநில செயலாளர் கோவை செய்யது ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள்             9543861618      என்ற என்னில் தொடர்பு கொள்ளவும்...

Saturday, October 20, 2012

கொள்ளுமேடு தமுமுக கழக போராளி Z.F முஹம்மது ரிஃபாயி அவர்களின் திருமணம்


‎!!தமுமுகவை தூக்கிப் பிடிப்போம்!! !!கூட்டுத்தலமையைய் போற்றிக்காப்போம்!! "இறைவனின் திருப்பெயரால்" "அஸ்ஸலாமு அலைக்கும்"(வரஹ்) கொள்ளுமேடு தமுமுக கழக போராளி Z.F முஹம்மது ரிஃபாயி அவர்களின் திருமண விழாவை சிறப்பிக்க வருகை தரும் சிறப்ப விருந்தினர் தமுமுகவின் மூத்த தலைவர் மமகவின் சட்ட மன்ற உறுப்பினர் எங்களின் பாசமிகு தலைவர் "MHஜவாஹிருல்லாஹ்"அவர்களே !!வருக!! !!வருக!! இம்மண மக்களை நபிவழியில் சிறப்பிக்க இறைவனிடம் வேண்டுகிறோம், நகர தமுமுக& மமக கழக சொந்தங்கள்



Thursday, October 18, 2012

மாபெரும் முற்றுகை போர்


நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு அக்டோபர் 22 காலை 11 மணிக்கு (இன்ஷா அல்லாஹ்)

காவிரி நதி நீரின் உரிய பங்கினை தமிழகத்திற்கு தர மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் கொடுக்காதே !
எனக்கோரி நெய்வேலியில் மாபெரும் அனல் மின் நிலைய முற்றுகை போர், தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெறும்.

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரித்து வாரீர்...
அழைக்கிறது மனிதநேய மக்கள் கட்சி,,,

பக்ரீத் பெருநாளில் பி.எட். கலந்தாய்வு ஒத்தி வைக்குமாறு மமக கோரிக்கை


முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாளில் நடைபெறவிருக்கும் பி.எட். கலந்தாய்வு மற்றும் கருத்தரங்குகளை ஒத்தி வைக்குமாறு மனிதநேய மக்கள் கட்சியின் மூத்தத் தலைவரும் இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா தமிழக உயர்கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மேலும் அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
வருகின்ற 27.10.2012 அன்று முஸ்லிம்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் பி.எட். பயிற்சியில் பயின்றுவரும் மாணவ/மாணவியர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் கருத்தரங்கம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதால் அதில் காலை 9:30 மணிக்கு பங்கேற்க வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலைதூர கல்வி இயக்குநர் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பக்ரீத் தினத்தன்று தமிழக அரசு விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது. இப்புனிதநாளில் காலை 8 மணி முதல் 12 வரை முஸ்லிம்கள் தங்களின் இறை கடமைகளை நிறைவேற்றியவாறு இருப்பர். இந்த வேளையில் தேர்வு எழுத்துவதுதோ கவுன்சிலிங் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்பது என்பது சிரமம்.
எனவே 27.10.2012 நடைபெறவுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக பி.எட். கவுன்சிலிங் மற்றும் கருத்தரங்க தேதிகளை மாற்றம் செய்து ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Wednesday, October 17, 2012

காவிரிக்காக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தலையில் கருப்பு முண்டாசு கட்டிக்கொண்டு அறவழி ஆர்ப்பாட்டம்


காவிரி நதி நீரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குரிய பங்கினை தர மறுக்கும் கன்னட அரசியல்வாதிகளையும், மொழி வெறியர்களையும் கண்டித்து மமக வின் சார்பில் இன்று (16-10-2012) திருவாரூரில் தலையில் கருப்பு முண்டாசு கட்டிக்கொண்டு அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காலை 10.30 மணியளவில் பழைய ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில், பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி கண்டன உரை நிகழ்த்தினார். மாநில துணை பொதுச் செயலாளர் சரவண பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் ஆயிரக்கணக்கில் திரளாக பங்கேற்றனர்.


thanks tmmk.in

Tuesday, October 16, 2012

தமிழகத்திற்கு காவிரி நதிநீரை திறந்துவிட கோரி தலையில் கறுப்பு முன்டாசு கட்டி போராட்டம்


மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுவைக்கு தரவேண்டிய காவிரி நதிநீரை வழங்க தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசியல்வாதிகளையும், கன்னட வெறியர்களையும் கண்டித்தும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதி நீரை தடையின்றி திறந்துவிட கர்நாடக அரசை வ-யுறுத்தியும் திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாளை காலை 10:30 மணியளவில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் "தலையில் கறுப்பு முன்டாசு கட்டி அறவழிப் போராட்டம்" நடைபெற உள்ளது இப்போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும், விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில அமைப்புச் செயலாளர் ராவுத்தர்ஷா தமுமுக மாநில செயலாளர் மீரான் மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

அன்புடன்
(பி.எம்.ஆர். சம்சுதீன்)

Monday, October 15, 2012

திருவாரூரில் காவிரிக்காக அறவழி ஆர்ப்பாட்டம். ஏற்பாடுகள் தீவிரம்


காவிரி நதி நீரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குரிய பங்கினை தர மறுக்கும் கன்னட அரசியல்வாதிகளையும், மொழி வெறியர்களையும் கண்டித்து மமக வின் சார்பில் நாளை (16-10-2012) திருவாரூரில் தலையில் கருப்பு முண்டாசு கட்டிக்கொண்டு அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
காலை 10.30 மணியளவில் பழைய ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி, பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில துணை பொதுச் செயலாளர் சரவண பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இதில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் திரளாக பங்கேற்க உள்ளனர்.
திருவாரூர் முழுக்க போராட்ட விளம்பரங்களும், மமக வின் கொடிகளும் பரபரப்பை ஊட்டிக் கொண்டிருக்கின்றன.

விழுப்புரம் வடக்கு மாவட்டம் - செயற்குழு கூட்டம்


13.10.2012 சனிக்கிழமை அன்று விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைத்த மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரம் RR மஹாலில் நடைபெற்றது. த.மு.மு.க. மாநில பொது செயலாளர் ப.அப்துல் சமது , ம.ம.க. இணை பொது செயலாளர் s.s.ஹாரூண் ரஷித் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் மாவட்டம், ஒன்றியம், நகரம் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Saturday, October 13, 2012

கோவை - மனித நேய மக்கள் கட்சின் புதிய கிளை திறப்பு விழா


கோவை மாநகர் மனிதநேய மக்கள் கட்சியின் புதிய கிளையான லாரி பேட்டை பின்புறம் உள்ள அண்ணா நகரில் மொத்த மீன் மார்க்கெட் கிளையை 13-10-2012 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கட்சியின் மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்கள் கொடி ஏற்றி திறந்து வைத்தார்கள். தமுமுக - மமக மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.