தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Saturday, October 13, 2012

சட்டபேரவை சபாநாயகர் தனபால் தேர்வு: முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் ஆற்றிய உரை


கடந்த 11.10.2012 சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தேர்வு செய்யப்பட்டு அனைத்து கட்சி தலைவர்களும் அவரை பற்றி வாழ்த்தி பேசிய உரையில் சட்டமன்ற மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் ஆற்றிய உரை:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பதினான்காவது தமிழக சட்டமன்றத்தின் பேரவைத் தலைவராக நீங்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது எங்கள் மனிதநேய மக்கள் கட்சிக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் உங்களுடைய பணிகளைச் சிறப்பாகச் செய்வதற்கு முதலிலே நான் பிரார்த்திக்கின்றேன். இன்றைய தினம், நிச்சயமாக ஒடுக்கப்பட்ட மக்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கக்கூடிய அருந்ததியர் மக்களுக்காக வேண்டி மட்டுமல்ல, இந்த நாட்டிலே சமூகநீதி தழைத் தோங்கி இருக்க வேண்டுமென்று எண்ணக்கூடிய ஒவ்வொருவருக்கும் ஒரு பொன் நாளாக இன்றைய தினத்தை நாங்கள் கருதுகின்றோம். ஏனென்றால், அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள், நீங்களே இந்த அவையினுடைய துணைத் தலைவராக இருந்திருக்கிறீர்கள். ஆனால் இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்ந்தெடுப்படவில்லை அந்த வரலாறு தமிழகத்திலே இன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக உங்களை மீண்டும் மனமாரப் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன் நம்முடைய முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் சபாநாயகரைப் பற்றி The speaker represemts the house . He represent the dignity the freedom of the House and because the House represent the Nation in a particular way the speaker becomes a symbol of the Nation's freedom and liberty. Therefore, that should be an honoured position, a free position and should be occupied always by persons of outstanding alloy and impartiality.
தமிழிலே மொழிபெயர்க்க வேண்டுமென்றால் ஒட்டுமொத்த பேரவையின் பிரதிநிதியாக சபாநாயகர் விளங்குகிறார். பேரவையின் கண்ணியத்தைப் பற்றி பிரதிபலிப்பவராக அதன் சுதந்திரத்தின் அடையாளமாக அவர் திகழ்கிறார். பேரவை ஒரு குறிப்பிட்ட வகையில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதால் நாட்டில் நிலவும் சுதந்திரத்தின் சின்னமாக சபாநாயகர் விளங்குகிறார். எனவே, சபாநாயகர் பதவி என்பது கண்ணியத்திற்குரியது, சுதந்திரமானது, ஆற்றல்மிகுந்த பாராபட்சம் இல்லாதவர்களால் மட்டுமே அந்தப் பதவி நிரப்பப்படவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இத்துணை இலக்கணங்களையும் பொருந்தியவராகத்தான் நாங்கள் உங்களை இந்த அவையினுடைய தலைவராக பார்க்கின்றோம். நிச்சயமாக உங்களுடைய காலக்கட்டத்தில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதல்முறையாக சபாநாயகராக வீற்றிருந்தார் என்று வரலாறு மட்டுமல்லாமல் அந்த அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த சபாநாயகர் பாராபட்சம் இல்லாமல் அனைவருக்கும் குறிப்பாக எதிர்க்கட்சியினருக்கும் அவர்களுடைய கருத்துகளைப் பிரதிபலிப்பதற்கு வழிவகுத்தார் என்ற வரலாற்றை நீங்கள் நிச்சயம் படைப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது மீண்டும் உங்களை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வாழ்த்தி, உங்களுக்காக பிரார்த்தித்து விடை பெறுகிறேன்.

No comments:

Post a Comment