தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Monday, October 29, 2012

இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவர்


பட்ணன் ஹாப்ஸா என்றழைக்கப்பட்டவர் மேலப்பாளையம் மவுலவி பி.எம். ஷாஹுல் ஹமீது மிஸ்பாஹி. பேட்டை ரியாளுல் ஜினான் அரபி கல்லூரியில் இஸ்லாமியக் கல்வி பயின்ற மவ்லவி பி.எம். ஷாஹுல் ஹமீது மிஸ்பாஹி அவர்கள். 1963ஆம் ஆண்டு நீடூர் மிஸ்பாவுல்ஹுதா அரபி கல்லூரியில் பட்டம் பெற்றார். சிறிது காலம் கிளியனூர் அரபி கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பிறந்த ஊரிலேயே மார்க்கப்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டவுடன் அங்கிருந்து விலகினார். மேலப்பாளையம் வி.எஸ்.டி. வக்பு அலல் அவ்லாதினர் நடத்திய மதரஸாவில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

1980ல் மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வராக ஆனார். 2003 வரை தொடர்ந்து 23 ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றினார். முதுமையின் காரணமாக கவுரவ முதல்வராக இறுதி வரை செயல்பட்டார். ஜமாஅத்துல் உலமாவின் நெல்லை மாவட்ட முப்தியாகவும் இருந்தார்.
கல்லூரியின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்காக தமிழகம் முழுவதும் பயணித்து நிதி திரட்டச் சென்ற போதும் ஜமாஅத் தொழுகையில் தக்பீர் தஹ்ரீமாவை தவற விடமாட்டார்.
தொழுகையில் ஜம்வு கஸர் செய்ய அனுமதி இருந்தும் ஆயிஷா(ரலி) 4 ரகஅத் தொழுததை ரசூல்(ஸல்) அவர்கள் நீ சரியாகச் செய்தாய் என்று கூறியுள்ளார்கள் என்று மேற்கோள் காட்டி தொழுவார். நெல்லையிலிருந்து கோவில்பட்டி, பிறகு விருதுநகர், மதுரை, விழுப்புரம் என்று இறங்கி ஒவ்வொரு நேர தொழுகையையும் ஆங்காங்கு தொழுதுதான் சென்னை செல்வார். ஒரு முறையாவது நேரடியாக ஒரே வண்டியில் சென்னை சென்றது கிடையாது.
73 வயதான மவ்லவி பி.எம். ஷாகுல் ஹமீது அவர்கள் 19.10.12 அன்று காலை 10 மணிக்கு மரணமடைந்தார். அவரது உடல் 20.10.12 அன்று மேலப்பாளையம் காஜா நாயகம் ஜும்ஆ பள்ளி கபரஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment