தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Saturday, December 1, 2012

சிறைவாசி அபுதாகிர் விடுதலைக்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து உயிருக்கு போராடிவரும் சிறைவாசி சகோதரர் அபுதாகிர்... நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோசமாகிவருகிறது... சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன... கண்பார்வை வேகமாக குறைந்துவருகிறது... வலதுகால் மூட்டுக்கு கீழ் கொப்புளங்கள் இரத்தமும் சீளுமாக அவருக்கு மிகுந்த வேதனையை தருகிறது.
உயிரின் இறுதி கட்டத்தில் இருக்கும். உயர் சிகிச்சைக்காக அவரை நீதி மன்றம் 90 நாள் பரோல் கொடுத்தும் அதை மதிக்காமல் தமிழக அரசு இன்னும் அவரை மருத்துவ் மனையில் வைத்து சிறை படுத்தி உள்ளனர்.

இதை கண்டித்து கோவையில் அணித்து முஸ்லிம் கூட்டமைப்பு என்ற பெயரில் கடந்து வெள்ளி மாலை (30 -11 -2012 ) 4 .30 மணியளவில் தமிழக அரசையும் , காவல் துறையும், பொய் தகவலை தொடர்து அளித்து வரும் உளவு துறையும் கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மிகவும் பிரம்மாண்ட முறையில் நடந்தது. இதில் த மு மு க சார்பாக மாநில பேச்சாளர் கோவை ஜாகிர் அவர்களும் ம ம க சார்பாக கவுன்சிலர் சாதிக் அலி அவர்களும் உரையாற்றினார். பிறகு சிறுமான்மை அறக்கட்டளை, த மு மு க , பி எப் ஐ, ஜமாஅதே இஸ்லாமிக் ஹிந்த் , ம ம க, எஸ் டி பி ஐ, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், வெல்பேர் பார்டி ஆப் இந்திய, இந்தியன் தௌ கித் ஜமாஅத் , இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ( ம) போன்ற அமைப்புகளின் தலைவர்களும் உரையாற்றினார். இதில் சுமார் 4000 பேருக்கும் மேல் கலந்து கொண்டனர் . இந்த முஸ்லிம் கூட்டமைப்பு முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடக்கும் அணைத்து பிரிச்சனைகளிலும் ஒன்று கூடி நீதிக்காக போராடுவது இனி தொடரும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது ... இதை அணைத்து மக்களும் வரவேற்று அல்லாகு அக்பர் என்று உரத்த குரலில் வரவேட்ட்னர்... இந்த ஆர்ப்பாட்டம் கோவை காவல் துறையை பெரும் வியப்புடன் வியப்படைய செய்தது ..... புகழ் அனைத்தும் இறைவனுக்கே

No comments:

Post a Comment