தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Wednesday, May 1, 2013

மரக்காணம் கலவரம் தொடர்பாக பேரா எம் எச் ஜவாஹிருல்லா கொண்டுவந்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் போது ஆற்றிய உரை:


29.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் மரக்காணம் கலவரம் தொடர்பாக பேரா எம் எச் ஜவாஹிருல்லா கொண்டுவந்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் போது ஆற்றிய உரை:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த 25 ஆம் தேதி மரக்காணம் பகுதியிலே நடைபெற்றது உண்மையிலேயே மிகவும் துயரமான சம்பவமாக விளங்குகிறது. குடிசைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன: கூனிமேடிலே உள்ள பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடைபெற்றிருக்கின்றது. அரசு பேருந்துகளும் எரிக்கப்பட்டு ஒரு பதற்றமான சூழல் உருவாயியிருப்பது நாம் அனைவரும் அறிந்தது. இதற்கு முக்கிய காரணமாக நாங்கள் கருதுவது, வெறுப்புணர்வை ஊட்டக்கூடிய பேச்சுகள், சாதி மோதல்களாக இருக்கட்டும் அல்லது வகுப்புவாத மோதல்களாக இருக்கட்டும், இவற்றுக்கு அடிப்படையாக விளங்குவது எந்தவிதமான வரம்பும் இல்லாமல் பொறுப்புணர்வும் இல்லாமல் மேடைகளிலே பிற சாதியினரையும், மதத்தைச் சார்ந்தவர்களையும் புண்படுத்தக்கூடிய வகையிலே அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய வகையிலே உரைகள் ஆற்றப்பட்டு வருகின்றன. எதிர்காலத்திலே, இதுபோன்ற வெறுப்புணர்வைத் தூண்டக்கூடிய பேச்சுகளை யார் பேசினாலும் அவர்கள்மீது அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். நிச்சயமாக இந்த அரசு பாரபட்சம் இல்லாமல் கடந்த காலங்களிலே கையாண்டிருக்கின்றது. எதிர்காலத்திலும் அப்படி கையாளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.


அந்த அடிப்படையிலே இந்த விஷயத்தையும் கையாண்டு சாதி பிளவுகள், மத ரீதியான பிளவுகள் இல்லாத சமூக நல்லிணக்கம், மிக சிறப்பான முறையிலே இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இருக்கின்றது என்ற அடிப்படையிலே நிச்சயமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி பராபட்சம் இல்லாமல் விசாரணைகளை நடத்தி, குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். 1987 ல் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். அவர்களை இப்படிப்பட்ட ஒரு பிரச்சினை இநத் அளவிற்கு அல்ல, இதைவிட மிகப் பெரிய அளவில் நடைபெற்றப்போது அனைத்து சமூகத் தலைவர்களையும் ஒன்று சேர்த்து அவர்களிடம் நீண்ட நேரம் பேசி, ஒரு சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதுபோன்று நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இந்த அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டுமென்று கேட்டு அரசாங்கத்தினுடைய கவனத்தை ஈர்த்து அமர்கின்றேன்.

No comments:

Post a Comment