தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Friday, April 26, 2013

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்


தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா கொண்டுவந்த கவனஈர்ப்பு தீர்மானம்
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த மார்ச் 23 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக டைஆக்சைடு வெளியேறியதைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலே பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள், மரத்தில் உள்ள இலைகள்கூட காய்ந்துபோகக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டதை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிட்டதற்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மகாராஸ்டிரா மாநிலம் இரத்தினகிரியில் இந்த ஆலை தொடங்கப்பட்டபோது அங்கே மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தி, அங்கே மூடினார்கள். அதற்குப் பிறகு கோவாவிற்குச் சென்றார்கள் அங்கும் அனுமதி மறுக்கப்ட்டது அதற்குப்பிறகு குஜராத்திலும் அனுமதி மறுக்கப்பட்ட சூழ்நிலையில்தான் தமிழ்நாட்டில் அந்த ஆலை தொடங்கப்பட்டு எனக்கு முன்பு பேசிய மாண்புமிகு உறுப்பினர் திரு.சவுந்தரரசான் அவர்கள் நிலைமைகளையெல்லாம் சொன்னார்கள், என்னுடைய கேள்வி என்னவென்றால், ஸ்டெர்லைட் ஆலை பக்கத்தில் இருக்கக்கூடிய குடிநீர் எல்லாம் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு இலக்காகி, அமெரிக்க சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மார்க் செரோனி என்பவர் இந்தத் தண்ணீரை குடித்தால் மனிதர்களுக்கு கேன்சர் ஏற்படும், கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று அறிக்கைக் கொடுத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இந்த ஸ்டெர்லைட் ஆலைக்காக துôத்துக்குடி துறைமுகம் வழியாக தாமிர அடர்த்தி உலோகம் கொடிய நச்சுத்தன்மைவாய்ந்த யுரேனியம் ஆர்சினிக் பிஸ்மெட் குளோரின் உட்பட நச்சு உலோகங்கள் இலட்சக்கணக்கான டன் ஒன்றாக இருக்கின்றது. இதை தடுத்து நிறுத்துவதற்கும் மார்ச் 23ல் இந்த நச்சு வாயு வெளியேறுவதற்கு முன்பாக நவம்பர் 12 லிருந்து மார்ச் 23 வரை 84 முறை இதுபோன்ற நச்சு வாயுக்கள் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளிவந்திருக்கின்றது. போபாலில் 1984-ல் யூனியன் கார்பைட்டில் இதுபோன்று நச்சுத்தன்ûமைதான தொடர்ந்து வெளிவந்து மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது அதுபோன்றுதான் துôத்துக்குடியிலே, ஸ்டெர்லைட் ஆலையிலே நடந்து வருகிறது. எனவே இந்த ஆலையை மூடுவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க அரசு முன்வரவேண்டும்

No comments:

Post a Comment