தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Thursday, November 29, 2012

தமுமுகவின் மீது அவதூறு: மத்திய அரசுக்கு தமுமுக கண்டனம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
அரசு சார்பற்ற நிறுவனங்கள் 2008-09ஆம் ஆண்டுகளில் ரூ. 10,997.35 கோடியும், 2009-10 ஆண்டில் ரூ.10,431.12 கோடியும், 2010-11ல் ரூ.10,334.12 கோடியும் வெளிநாட்டு பணம் பெற்றுள்ளதாகவும், இவற்றில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோவையும் ஒன்று என்றும் மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஒரு அரசு சாரா நிறுவனம் அல்ல. அது எந்தவொரு வெளிநாட்டு அரசிடமிருந்தோ, வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்தோ ஒரு ரூபாய் கூட பெற்றதில்லை.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எவ்விதப் பொருளாதார உதவியும் செய்யவில்லை. உண்மைநிலை இப்படியிருக்க, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வெளிநாட்டு நிதியைப் பெற்றுள்ளது என்ற மத்திய அரசின் தகவல் முற்றிலும் அவதூறானதாகும்.
எங்கள் மடியில் கணம் இல்லை, எனவே வழியில் பயம் இல்லை. சிபிஐ விசாரணையை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். (ப.அப்துல் சமது)

No comments:

Post a Comment