தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Saturday, November 10, 2012

கோவை - பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமுமுக வின் மாநில துணை பொது செயலாளர் இ. உம்மர் அவர்கள் பேட்டி


கோவை மாநகர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் இன்று (9-11-2012) கோவை பத்திரிக்கையாளர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமுமுக வின் மாநில துணை பொது செயலாளர் இ. உம்மர் அவர்கள் பேட்டி அளித்தார்.
இதில் 6-11-2012 ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் சில மர்ம மனிதர்களால் ஒருவர் தாக்குதலுகுள்ளான சம்பவத்தை யொட்டி 7-11-2012 கோவை கரும்புக்கடை பகுதியில் பள்ளிவாசலின் மத குருவாக பணியாற்றும் முஸ்லிம் ஒருவரும் தாக்கப்பட்டார். மேற்படி இரண்டு சம்பவங்களையும் தமுமுக வன்மையாக கண்டிப்பதுடன் உண்மை குற்றவாளிகளையும் காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற தாக்குதலையொட்டி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்து தீ வைத்து கொளுத்தப்பட்டது.

அதும்மில்லாமல் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை கல் வீசி தாக்கியும், ஏராளமான வர்த்தக நிறுவனங்களை சேதப்படுத்தியும், பொது மக்களை பீதியடைய செயும் வண்ணமாக மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் சதிஸ்குமார் தலைமை யில் நுற்றுக்கும் மேற்பட்டோர் வன்முறையில் ஈடுபட்டு பொதுமக்களை பீதியடைய செய்துள்ளனர். குறிப்பாக சிறுபான்மை மக்களின் வர்த்தக நிறுவனங்களை குறி வைத்து தாக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவத்தை முஸ்லிம்களையும் சம்பந்தப்படுத்தி சங்பரிவார் மாநில நிர்வாகிகள் பத்திரிக்கையலும் தொலைகாட்சிகளிலும் பேட்டி கொடுப்பதும் உரையாற்றுவதும் அமைதியாக திகழும் கோவை மாவட்டத்தில் வன்முறையை தூண்டும் வண்ணமாக உள்ளது. மேலும் நடை பெற்ற அனைத்து சம்பவங்களையும் முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியும் முஸ்லிம்கள் அமைதியாக காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அமைதி காத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளான மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு நெருக்கடிக்கு மக்கள் ஆளாகி கொண்டிருக்கும் சுழலில் மேட்டுபாலயத்தில் நடைபெற்ற இச்சம்பவங்களுக்கு மதச்சாயம் பூசி கோவையை கலவர காடாக மாற்ற முயற்சிக்கும் சங்பரிவார் அமைப்புகளின் செயலை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது. மேற்படி சம்பவத்திற்கு காரணமாவர்களின் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனவும் தமுமுக வலியுறுத்துகிறது. என்று கூறினார்கள்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநில செயலாளர் கோவை செய்யது , தொழிசங்க மாநில செயலாளர் ஏ.கே. சுல்தான் அமீர் , மாநகர மாவட்ட தலைவர் இ. அகமத் கபீர், சாதிக் அலி MC , அப்துல் பசீர், அஜ்மீர் கான், அக்ஷயா நிசார் மற்றும் மாவட்ட பகுதி, அணி, கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment