தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Monday, November 26, 2012

மத்திய அரசுக்கு கொள்கை பக்கவாதம்

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சில்லறை வணிகத்தில் 51% அந்நிய முதலீடுகளை எதிர்த்து 1 கோடி துண்டு பிரசுரங்களை வழங்கும் விழிப்புணர்வு பரப்புரை தொடங்கப்பட்டிருக்கிறது.
நவம்பர் 23, 24, 25 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி முழுக்க மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் தொடங்கி கிராமங்கள் தோறும் இப்பரப்புரை நடக்கிறது.
சென்னை புரசைவாக்கத்தில் மாநிலத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி, வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


மதுரையில் ம.ம.க.பொதுச்செயலாளர் எம்.தமிமுன்அன்சாரி தொடங்கி வைக்க, சி.பி.எம்.கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர்.ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். பெரம்பலூரில் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
அப்போது பேசிய தமிமுன் அன்சாரி சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதித்தால் 21 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்கிறார்கள்.
சில்லறை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் 4 கோடி இந்தியர்களின் வயிற்றில் அடித்துவிட்டு 21 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்பது ஒரு மோசடி. மன்மோகன்சிங் இந்திய பிரதமராக இருப்பதை விட, அமெரிக்காவின் இந்திய வைஸ்ராயாக இருப்பதில் பெருமைப்படுகிறார் என்று பேசினார்.
சி.பி.எம். மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பேசும் போது மத்திய அரசுக்கு கொள்கை பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டவர் சோப்பு, சீப்பு விற்பதற்கு வெள்ளைக்காரன் எதற்கு என்றார்.
பிறகு மதுரை வீதிகளில் இறங்கி இருவரும் துண்டு பிரசுரங்களை வழங்கி பரப்புரையை தொடங்கி வைத்தனர். பின்னால் அணிவகுத்த தொண்டர்கள் பரப்புரைக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியபடியே பின் தொடர்ந்தனனர்.
இதே கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளிதுமளியில் ஈடுபட்டு வரும் நிலையில் ம.ம.க. சரியான தருணத்தில் மக்களை சந்திக்கிறது.
திருச்சியில் தமுமுக பொதுச்செயலாளர் அப்துல் சமதுவும், கோவையில் துணை பொதுச்செயலாளர் இ. உம்மர் அவர்களும் தொடங்கி வைத்தனர். பிற இடங்களில் மாநில நிர்வாகிகள் பரப்புரையை தொடங்கி வைத்தனர்.
தமிழகம் முழுக்க மமக வினர் இன்று தொடங்கிய பரப்புரையில் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வாசித்து விட்டு மக்கள் மமக வினரை வெகுவாக பாராட்டினர்.

No comments:

Post a Comment