தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Thursday, November 29, 2012

பொள்ளாச்சி பேருந்து விபத்து - மீட்பு பணியில் தமுமுக


பொள்ளாச்சி அருகே வால்பாறை மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 47 பேர் படுகாயமடைந்தனர்.
வால்பாறையில் இருந்து புறப்பட்ட இந்த பேருந்து, பழனி செல்வதற்காக, வால்பாறை மலைப்பாதை அருகே நேற்றிரவு 10.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. பொள்ளாச்சி அருகே ஆழியார் மலைப்பாதையில் உள்ள மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, பேருந்து ஓட்டுனரி்ன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை உடைத்துக் கொண்டு, 300 அடி பள்ளத்தில் விழுந்தது.

பள்ளத்தில் உருண்ட பேருந்து, அங்கிருந்த மரங்களில் சிக்கியது. பேருந்தில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்றவர்கள், போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை அறிந்தவுடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உடனே களத்தில் இறங்கி மீட்பு பணிகளை செய்தனர். பொள்ளாச்சி, ஆனமலை, வால்பாறை சேர்த்த நிர்வாகிகள் விபத்து நிகழ்த்த இடத்தில த மு மு க ஆம்புலன்சுடன் சென்று உதவி புரிந்தனர். கோவை அரசு மருத்துவ மனையில் 21 பேர் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகிகளும் மருத்துவ சேவை அணி நிர்வாகிகளும் அரசு மருத்துவ மனை RMO சிவா பிரகாசம் அவர்களை சந்தித்து சிகிசியை தீவிர படுத்து மாறு கேட்டுகொண்டனர். அந்த நேரத்தில் மாநகர காவல் துறை ஆணையாளர் த மு மு க சேவையை பாராட்டினார்கள். காயம் அடைத்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment