தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Friday, November 2, 2012

ஆம்பூர் பெத்லேகேம் பகுதியில் மேம்பாலம் அமைக்க அஸ்லம் பாஷா MLA கோரிக்கை


2012-2013 ஆம் ஆண்டுக்கான துணை மதிப்பீடுகளுக்கான மானியக் கோரிக்கையின் போது கடந்த 1.11.2012 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:
மாண்புமிகு தலைவர் அவர்களே, அரசு உட்கட்டமைப்பு வசதிக்கு கூடுதலாக 275.68 கோடி ஒதுக்கீடு செய்திருக்கின்றது. இந்த நேரத்திலே ஒரு முக்கியமான கோரிக்கையை நான் வலியுறுத்த கடமைப்பட்டிருக்கின்றேன். என்னுடைய ஆம்பூர் நகரத்திலே மூன்றில் ஒரு பகுதி மக்கள் வசிக்கக்கூடிய பெத்லேகேம் என்று சொல்லக்கூடிய ஒரு பகுதியில் ஏறத்தாழ 30000 மக்கள் வசித்துவருகிறார்கள். இந்தப் பகுதி அரசு அலுவலகங்கள், கல்லுôரிகள், ஊரின் முக்கிய மருத்துவமனை இருக்கின்ற பகுதி. அந்தப் பகுதியில் இரயில்வே தண்டவாளம் அந்தப் பக்கமாக இருப்பதாலே அவர்களுக்கு வேறு வழி கிடையாது. அந்தக் காணாறு வழியாகத்தான் அவர்கள் செல்ல வேண்டும். நேற்றைக்கு முன்தினம் பெய்த கனத்த மழையின் காரணமாக நேற்று ஒரு நாள் முழுவதும் அந்தப் பகுதிக்கு மக்கள் சென்றுவர முடியவில்லை. மிகுந்த வெள்ளம் அந்தப் பகுதியிலே. ஆகவே, நீண்ட நாள் கோரிக்கையாக சென்ற நிதிநிலை கூட்டத்தொடரின் போது நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனுவினை நான் அளித்திருந்தேன். அவர்களும் அதைப் பரிசீலித்து துறைக்கு அனுப்பி, அதற்கு திட்ட மதிப்பீடும் செய்யப்பட்டுள்ளது. ஆகவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் பரிந்துரை செய்து அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு மேம்பாலத்தை அமைத்துத்தருமாறு இந்த நேரத்திலே ஒரு கோரிக்கையாக வைக்கின்றேன்.

அதேபோல, ஆம்பூரின் முக்கியப் பகுதியிலே ஒரு பெரிய காணாறு இருக்கின்றது. அந்த ஆற்றைச் சுற்றி மக்கள் வசிக்கின்றார்கள். அது புறம்போக்கு நிலம் கிடையாது. பட்டா இடத்திலே சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டியிருக்கின்றார்கள். 2010 ஆம் ஆண்டு பெய்த கனத்த மழையின் காரணமாக அந்தக் காணாற்றிலே வெள்ளம் வந்து 5 பேர் மரணமடைந்திருக்கின்றார்கள். நேற்றைக்கு அந்தப் பகுதியிலே பெய்த கனத்த மழையின் காரணமாக மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு பக்கத்தில் இருக்கின்ற வீடுகளுக்கு தண்ணீர் நிரம்பி அந்தப் பகுதியிலே இருக்கின்ற மக்களெல்லாம் ஓரளவிற்கு வெளியேற்றப்பட்டு விட்டார்கள், அந்தக் கால்வாய் பகுதிக்கு ஒரு தடுப்புச் சுவர் அமைத்துத்தர வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment