தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Monday, November 26, 2012

ராஜபக்சேவை மலேசியாவில் அனுமதிக்கக் கூடாது - மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சி இணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிடும் அறிக்கை.
வருகின்ற டிசம்பர் 4ம் தேதி மலேசியாவில் நடைபெறும் இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த செய்தி உண்மையாக இருக்குமானால், போர் என்ற போர்வையில் லட்சக்கணக்கான மக்களை கொடூரமாக கொன்றவனுக்கு அங்கீகாரம் அளிப்பது போன்றதாகும். 2009ல் நடைபெற்ற இறுதி கட்டப் போரில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக ராஜபக்சே அரசால் நியமிக்கப் பட்ட LLRC ஆணையமே குற்றம் சாட்டியுள்ளது, சமீபத்தில் ஐ.நா. சபைகூட ராஜபக்சேவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
சேனல் 4 என்ற தொலைகாட்சி ஊடகம் இலங்கை இறுதிகட்டப் போரில் குழந்தைகள், பெண்கள், உள்ளிட்ட அப்பாவி மக்கள் கொடூரமாக தாக்கப்பட்ட காட்சிகளை சமீபத்தில் ஒளிபரப்பியது. இதைக் கண்ட தமிழர்கள் மட்டுமல்லாது உலக மக்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளயினர். உலகமே ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சி செய்து வரும் சூழலில் மலேசியாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள அழைத்திருப்பது வேதனை அளிக்கிறது.
போரில் பெண்களையும், குழந்தைகளையும் கொள்ளக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே, மலேசியாவில் நடைபெறும் இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் ராஜபக்சே கலந்து கொள்ள அரசு தடை செய்ய வேண்டும்.

எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது
இணைப் பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

No comments:

Post a Comment