தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Monday, November 19, 2012

மன்னிப்புக் கோரியது துப்பாக்கி படக் குழு


நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக வந்த தகவலையடுத்து தமுமுக உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகள் அடங்கிய முஸ்லிம் கூட்டமைப்பு சார்பாக இன்று(15.11.2012) காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாலை வரை நீடித்த இக்கூட்டத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும், நடிகர் விஜய் தரப்பில் எழுத்துமூலமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இதைச் செய்யத் தவறினால் போராட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர்களுடன் பேச தமுமுக பொதுச் செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட பத்து பேர் கொண்ட குழு இன்று மாலை விஜய்யின் தந்தை சந்திரசேகர், படத்தின் டைரக்டர் முருகதாஸ், படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோர் அடங்கிய படக் குழுவினரை சந்தித்து தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
படக்குழு, முஸ்லிம் குழுவிடம், இப்படம் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கவில்லை என்று கூறி மன்னிப்புக் கோரியது மட்டுமல்லாமல் எழுத்துமூலமாக மன்னிப்புக் கடிதம் வழங்குவதாகவும் தெரிவித்தது. படத்தில் முஸ்லிம்களைப் புண்படுத்தும் காட்சிகளை நீக்குவதாகவும் உறுதி அளித்தது.
முஸ்லிம் சமூகத்தை மிகவும் புண்படுத்திய துப்பாக்கி படப்பிரச்சனையில் படக்குழுவினர் முஸ்லிம் தலைவர்களுடனான சந்திப்பிற்கு தமுமுக முன்முயற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment