தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Saturday, November 3, 2012

குவைத் தமுமுக மமக வின் மண்டல துணை தலைவர் அவர்களுக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவசர தகவல்


குவைத் தமுமுக மமக வின் மண்டல துணை தலைவர் செய்யது பாட்சா அவர்களுக்கு மனித நேயமக்கள் கட்சி மூத்த தலைவரும் ராமநாத புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ( MLA)அவர்கள் அவசர தகவல் அனுப்பினார்.
அதில் குவைத்தில் ஒருவர் விபத்தில் இறந்து விட்டதாகவும் அது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கும் படியும் கேட்டுக் கொண்டார்,
சமீப காலமாக புதிய உத்வேகத்துடன் துடிப்பான முறையில் வீரியத்துடன் செயல் பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமுமுக - மமக வின் மண்டல செயலாளர் முஜிப்ரகுமான் தலைமையில் அமைப்பு செயலாளர் அலாவுதீன் ,கல்விக்குழு செயலாளர் முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் ,மற்றும் மரைக்காயர் ஆகியோர் விசாரணையில் இறங்கினர்.



விபரம் ;
அசாவியாவில் பைபாஸ் சாலையை கடக்க முயன்ற தமிழர்!
சாலை விபத்தில் பரிதாப மரணம் !
ராமநாத புரம் பார்த்திபனுரை சேர்ந்தவர் பாட்ஷா இவரது மகன் அப்துல் ரகுமான் இவர் குவைத்திற்கு அல் அபராஜ் கிளினிங் கம்பெனிக்கு அறுபது தினார் சம்பளத்திற்கு லேபர் வேலைக்காக வந்துள்ளார்,
குவைத்திற்கு வந்து ஒன்னே முக்கால் வருடம் ஆகிறது.இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ஒரு குழந்தைக்கு இரண்டு வயதும் மற்றோறு குழந்தைக்கு எட்டு மாதமும் ஆகிறது .இவர் ஏற்க்கனவே அபுதாபியில் பத்து வருடம் பணிபுரிந்துள்ளார்.
அப்துல் ரகுமானின் மரணத்திற்கு முன் நடந்த நிகழ்வுகள் ;
இவர் கம்பெனியில் வேலை முடிவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்பே கம்பெனியை விட்டு வெளியே வந்து அந்த வழியே வந்த லாரியில் ஏறி வந்துள்ளார்.
இவர் வீட்டிக்கு செல்ல லாரியை விட்டு இறங்கி அசாவியா பைபாஸ் சாலையை கடக்க முற்பட்ட போது அதி வேகத்தில் வந்த கார் ஒன்று இவர் மீது மோதி தூரமாக வீசி ஏறிய அந்த நிமிடத்தில் அவரது கம்பெனியில் இருந்து ஆட்களை ஏற்றி வந்த வேன் வருவதற்கும் நேரம் மிக சரியாக இருந்தது.
(இறைவனின் நாட்டம் இவர் வபாத்தாக வேண்டும் என்று ..)காரில் அடிப்பட்ட ரகுமானை கம்பெனி வேனிலிருந்து இறங்கிய அவரது நண்பர்கள் சிக்கல் ஊரை சேர்ந்த கலையரசன் ,பார்த்திபனுரை சேர்ந்த முத்துராமலிங்கம் ,கீழ புலம் ரஜினி ,வெள்ளங்களத்தூர் வேலுசாமி ,மேமங்கலம் நாகராஜ் ,இலவநேரி செல்வராஜ் ஆகியோர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் அவர் பரிதாபமாக உயிர் இழந்து விட்டார் .
இவர் குவைத்திற்கு வரும் போது வட்டிக்கு கடன் வாங்கி வந்துள்ளார். இவர் கடனை எல்லாம் அடைத்து நல்ல நிலைக்கு வரும் சுழலில் மரணம் அவரை முந்தி விட்டது (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிர்ராஜிவூன்.)
இவரது நண்பர்களிடத்தில் ரகுமானை பற்றி கேட்டதற்கு மிகவும் நல்ல மனிதர் ,மிகவும் சுருசுப்பானவர்,எந்த மனிதர்க்கும் தீங்கிழைககதவ்ர் தானுண்டு தன்வேலை உண்டு என இருப்பவர் என சிலாகிட்சு பேசினர்,
இவர் வேலை பார்க்கும் கம்பெனி மேனஜர் எஜிப்த் நாட்டை சேர்ந்தவர் மற்றும் கம்பெனி சுபேரேசர் வங்க தேசத்தை சார்ந்த அல் அமீன் கூறிய போது சொன்ன வேலையை முன்கூட்டியே செய்து முடிப்பவர் ,அது மட்டுமல்ல ஐந்து வேலை தொககுடியவர் எனவும் ரகுமானின் மரணம் நான் ஒரு சகோதரனை இழந்ததை போன்றது என கண்ணீர் மல்க கூறினார்.
நெல்லை தென்காசியை சேர்ந்த அப்பாஸ் என்பவர் கூறும்போது அவரோடு ஒரு வருடம் இருந்திருக்கிறேன். நேரம் தவறாமல் தொழக்கூடியவர்,தான் சாப்பிடும் போது அனைவரும் சாப்பிட்டு விட்டார்களா என்று கேட்கும் பழக்கம் உள்ளவர் என தெரிவித்தார் .உண்மையிலேயே அப்துர் ரகுமான் மிகவும் நல்லவராக இருந்துள்ளார்.இவரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து ,கபூர் வேதனையையும் நீக்கி மறுமையில் சுவன சோலையில் இருக்க செய் ! யா அல்லாஹ் என இவருக்காக அனைவரும் தூ ஆ செய்யவும் .
இன்ஷா அல்லாஹ் இவரது நல்லடக்கம் குவைத்தில் நடை பெறும் பட்சத்தில் அனைவருக்கும் பின்னர் தெரிவிக்கப்படும்.

குறிப்பு ;
தயவு செய்து சாலையை கடக்க முற்ப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அதற்குண்டான பாதையில் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .

தகவல் ; பீர் மரைக்காயர் ,
மக்கள் தொடர்பு &மீடியா செயலாளர்
குவைத் தமுமுக -ம ம க

No comments:

Post a Comment