தமுமுக1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும்,சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை சில ஆண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. தனித்துவமிக்க போராட்டங்கள்,தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம்,அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம்,லட்சிய உணர்வுகொண்டஊழியர்கள்,இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம்-இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
Thursday, November 29, 2012
சிறைவாசி அபுதாகிர் உயிருக்கு போராட்டம் - நீதிக்கான போராட்டம்
கோவை சிறையில் கடந்த 14 ஆண்டுகளாக வாடிக்கொண்டு இருக்கும் சிறைவாசி அபுதாகிர் என்பவர் இரு சிறுநிரகமும் பாதிக்கப்பட்டு இதய நோய்க்கும் உள்ளாகி பார்வை குறைபாடும் ஏற்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்... கடந்த 11 மாதங்களாக சிகிச்சைக்காக பரோல் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டுள்ளதால் நோயின் பாதிப்பு அதிகமாகி அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது.
மேலும் இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் சிறுபான்மை அறக்கட்டளை வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 24 -08 -12 அன்று சிறைவாசி அபுதாகிர் 30 -08 -2012 அன்றில் இருந்து பரோலில் விட உள்துறை செயலாளருக்கு உத்தரவு இட்டு இருந்தது. எனினும் அபுதஹிரை சிறையில் வைத்துள்ளது ...
காவிரி நதிநீதி விவகாரம்: அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளைக் கூட்டவேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக மாநில அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. பிரதமர் தலைமையிலான காவிரி நீர் தீர்ப்பாணையமும் மற்றும் உச்சநீதிமன்றமும் கர்நாடக மாநில அரசு ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டுமென உத்தரவுகள் பிறப்பித்தும் அதை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்தாத சூழ்நிலையில் தமிழக முதல்வர் அவர்கள் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடக முதல்வரோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மறுத்துள்ள கர்நாடக அரசை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிப்பதோடு, காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக முதல்வர் அவர்கள் அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
(ஜே.எஸ்.ரிபாயீ)
தமிழக முதலமைச்சருடன் முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பில் நடந்தது என்ன?
தீபவளி அன்று வெளியான துப்பாக்கி திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டன. இந்த பின்னணியில் துப்பாக்கி படக் குழுவினர் இது குறித்து தமிழக முதல்வரை சந்திக்க முயற்சித்தனர். தமிழக முதலமைச்சர் இவர்களை பார்க்க மறுத்து விட்டார். உள்துறைச் செயலாளர் ராஜகோபாலனை படக் குழுவினர் சந்தித்தனர். வர்த்தக ரீதியாக படம் எடுக்கின்றீர்கள். நீங்கள் பொறுப்புணர்வு இல்லாமல் படம் எடுத்து விட்டு பின்பு பாதுகாப்பு கேட்டால் எங்களால் தர இயலாது. புண்பட்ட முஸ்லிம் சமுதாய பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசி சுமூக நிலையை ஏற்படுத்துங்கள் என்று உள்துறைச் செயலாளர் திரு. இராஜகோபாலன் படக் குழுவினருக்கு அறிவுறுத்தினார். இதன் பிறகு தான் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தியதுடன் பகிரங்க மன்னிப்பு கேட்டனர். தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சமூகத்தின் எதிர்ப்பின் காரணமாக ஒரு திரைப்படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டதும் திரைப்படக் குழுவினர் பகிரங்கமாக முஸ்லிம் சமுதாய பிரதிநிதிகள் முன்னிலையில் பத்திரிகையாளர் கூட்டத்தில் மன்னிப்பு கேட்டதும் இதுவே முதன் முறையாகும். இந்த பின்னணியில் துப்பாக்கி பட விவகாரத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை புரிந்து செயல்பட்ட தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றித் தெரிவிப்பதுடள் சமுதாயத்தின் முக்கிய கோரிக்கைகளை அவரிடம் எடுத்துரைப்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தலைமைச் செயலகத்தில் நேற்று (நவம்பர் 28) தமிழக முதலமைச்சரைச் சந்தித்தனர்.
தமுமுகவின் மீது அவதூறு: மத்திய அரசுக்கு தமுமுக கண்டனம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
அரசு சார்பற்ற நிறுவனங்கள் 2008-09ஆம் ஆண்டுகளில் ரூ. 10,997.35 கோடியும், 2009-10 ஆண்டில் ரூ.10,431.12 கோடியும், 2010-11ல் ரூ.10,334.12 கோடியும் வெளிநாட்டு பணம் பெற்றுள்ளதாகவும், இவற்றில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோவையும் ஒன்று என்றும் மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஒரு அரசு சாரா நிறுவனம் அல்ல. அது எந்தவொரு வெளிநாட்டு அரசிடமிருந்தோ, வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்தோ ஒரு ரூபாய் கூட பெற்றதில்லை.
பேஸ்புக்கில் கருத்து: 2 பெண்களுக்கு தண்டனை விதித்த மாஜிஸ்திரேட் திடீர் இடமாற்றம்: மும்பை ஐகோர்ட்
சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம் அடைந்ததைத் தொடர்ந்து மறுநாள் மும்பையில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இதை மராட்டிய மாநிலம் பல்கர் நகரை சேர்ந்த 2 இளம்பெண்கள் பேஸ்புக் இணையத்தளத்தில் விமர்சனம் செய்திருந்தனர்.
சிவசேனா நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த 2 இளம்பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க பல்கர் மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பகடே உத்தரவிட்டார். பிறகு ரூ.15 ஆயிரம் ஜாமீனில் விடுவித்தார்.
இதற்கிடையே பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட 2 பெண்கள் கைதானது நாடெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2 பெண்களுக்கு தண்டனை கொடுத்ததும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பகடே இன்று திடீரென பல்கர் மாவட்டத்தில் இருந்து ஜல்கான் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மும்பை ஐகோர்ட் வெளியிட்டுள்ளது.
பொள்ளாச்சி பேருந்து விபத்து - மீட்பு பணியில் தமுமுக
பொள்ளாச்சி அருகே வால்பாறை மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 47 பேர் படுகாயமடைந்தனர்.
வால்பாறையில் இருந்து புறப்பட்ட இந்த பேருந்து, பழனி செல்வதற்காக, வால்பாறை மலைப்பாதை அருகே நேற்றிரவு 10.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. பொள்ளாச்சி அருகே ஆழியார் மலைப்பாதையில் உள்ள மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, பேருந்து ஓட்டுனரி்ன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை உடைத்துக் கொண்டு, 300 அடி பள்ளத்தில் விழுந்தது.
Subscribe to:
Posts (Atom)

