தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Wednesday, October 31, 2012

நீலம் புயல் எச்சரிக்கை


வங்க கடலில் உருவாகியுள்ள நீலம் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் புதன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேதாரண்யம் தொடங்கி திருவள்ளூர் வரை கடலோர மாவட்டங்களில் திங்கள் இரவிலிருந்து கன மழை பெய்ந்து வருகிறது. கிணறு, ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள வயல்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புயல் மற்றும் கன மழையை எதிர்கொள்ளும் வகையில் கடலோர மாவட்டங்களில் தமுமுக தொண்டரனியினர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். இப்பகுதிகளில் உள்ள தமுமுக வின் ஆம்புலன்ஸ் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்குமாறு தமுமுகவினர் அறிவுறுத்தப்பட்டுளனர்.

சென்னையில் பெருநாள் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்


இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவையின் சார்பாக சென்னை பிராட்வே டான்பாஸ்கோ பள்ளிக்கூட மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. தமுமுக&மமக மூத்த தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. அவர்கள் ஜும்ஆ பேருரை நிகழ்த்தினார்கள். இந்தப் பெருநாள் தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் தமது உரையில், இப்ராஹிம் (அலை), இஸ்மாயில் (அலை) மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோரின் தியாகங்களை நினைவுகூர்ந்தார்.

Tuesday, October 30, 2012

இளையான்குடியில் பாஜகவின் ரவுடித்தனத்திற்கு பாடம் புகட்டியது தமுமுக - பத்திரிக்கை செய்திகள்



> பொதுக்கூட்டத்தில் மனம்போனபடி கீழ்த்தரமாகப் பேசுவதும், தட்டிக்கேட்க ஆளில்லாததால் தறுதலைப் பேச்சுகளை மென்மேலும் வளர்ப்பதும்தான் சங்பரிவாரக் கும்பலின் கடந்தகால வரலாறு.
> காமத்தில் விஞ்சியது கன்னிமேரியா? கதீஜாவா? மணியம்மையா? என்றெல்லாம் அருவறுப்புத் தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்தி, தமிழகத்தில் மதவெறி நெருப்பை இந்து முன்னணி பற்றவைத்தது.
> 1995க்குப் பிறகு தமுமுக இந்தக் கயமைத்தனங்களுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் முற்றுப்புள்ளி வைத்தது.

Monday, October 29, 2012

இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவர்


பட்ணன் ஹாப்ஸா என்றழைக்கப்பட்டவர் மேலப்பாளையம் மவுலவி பி.எம். ஷாஹுல் ஹமீது மிஸ்பாஹி. பேட்டை ரியாளுல் ஜினான் அரபி கல்லூரியில் இஸ்லாமியக் கல்வி பயின்ற மவ்லவி பி.எம். ஷாஹுல் ஹமீது மிஸ்பாஹி அவர்கள். 1963ஆம் ஆண்டு நீடூர் மிஸ்பாவுல்ஹுதா அரபி கல்லூரியில் பட்டம் பெற்றார். சிறிது காலம் கிளியனூர் அரபி கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பிறந்த ஊரிலேயே மார்க்கப்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டவுடன் அங்கிருந்து விலகினார். மேலப்பாளையம் வி.எஸ்.டி. வக்பு அலல் அவ்லாதினர் நடத்திய மதரஸாவில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

குவைத் தமுமுக -மமக வின் கைதான் கிளைசார்பாக நடந்த தியாக திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி


குவைத் தமுமுக -ம ம க கைதான் கிளை சார்பாக இன்று 26 .,10 .2012 வெள்ளி கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பிறகு முர்காபில் உள்ள கன்னியாகுமரி உணவகத்தில் வைத்து ஈத்மிலன் -பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இறைவனின் மாபெரும் கிருபையால் கிளை தலைவர் (பரங்கி பேட்டை) ஹாஜா மக்தும் அவர்கள் தலைமையில் நடந்தது,
மிஸரப் கிளை செயற்குழு உறுப்பினர் (திருமுல்லைவாசல்) மொவ்லவி பைசுல் ரகுமான் அவர்கள் திருமறை வசனம் ஓதி கூட்டத்தை தொடங்கி வைத்தார் .
இந்த நிகழ்ச்சியை அழகான முறையில் கல்வி குழு செயலாளர் (முத்துகாப்பட்டி) ஹாஜா மைதின் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

துபாயில் சிறப்புடன் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி


மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் நோக்கில் வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி டெய்ரா பகுதியில் அமைந்துள்ள தமுமுக அலுவலகத்தில் 27.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அமீரகத் துணைத் தலைவர் ஹூசைன் பாஷா நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் அவசியத்தை எடுத்துரைத்தார்.
சவுதி அரேபியாவிலிருந்து வந்திருந்த அஃப்சலுல் உலமா பொறியாளர் ஜக்கரியா அவர்கள், முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு திருக் குர்ஆன், நபிமார்களின் வாழ்க்கை, வரலாற்று குறிப்புகள், பைபிள், இந்துக்களின் வேத நூல்களிலிருந்து பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாக வைத்து கேள்விகளுக்கு பதிலளித்தார். அதனையடுத்து, முஸ்லிம்களும் ஒரு சில விஷயங்களைக் குறித்து விளக்கங்கள் கேட்டு தெளிவுபெற்றனர். புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பொறியாளர் முஹம்மது அவர்கள் தன்னுடைய மன மாறுதலுக்கான காரணத்தையும், அதனுடைய முக்கியத்துவத்தைக் குறித்தும் பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ரியாத் மண்டல தமுமுக துணைப் பொதுச் செயலாளர் நூர் முஹம்மது அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டினை குறித்து பாராட்டினார். நல்ல நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். கலந்துக் கொண்டவர்களுக்கு இஸ்லாம் குறித்த புத்தகங்கள், குறுந்தகடுகள், இரவு உணவு வழங்கப்பட்டன. துபாய் மண்டல தமுமுக சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை மண்டலச் செயலாளர் மதுக்கூர் சிராஜ் தலைமையிலான குழுவினர்கள் வி.களத்தூர் உமர் பாருக், ஹைதர் நசீர், மன்சூர், முஜிப் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி


சமூக அவலம் களைய உறுதி ஏற்போம். தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி:
‘‘தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத்தின் மேண்மையைப் பறைசாற்றும் தினமாகும். சமூக அவலங்களான வன்முறை, வறுமை, சுற்றுச்சூழல், சீர்கேடு, லஞ்ச ஊழல் முறைகேடுகள், மக்களின் ஜீவாதார உரிமைகளை ஆதிக்க சக்திகள் தடுத்தல் உள்ளிட்ட உலகளாவிய தீமைகளை, சமூக அவலங்களைக் களைய நாம் தியாகம் செய்யத் தயாராவோம்.
விட்டுக் கொடுத்தல், தம்மிடம் உரியமை இல்லாதார்க்கு வழங்குதல், உரிமைகளை அறத்தின் வழிநின்று போராடுதல் என்ற அம்சங்களை வீடுதோறும் பரப்பி மானுட சமூகம் மேம்பட அனைவரும் ஒருங்கிணைவோம்’’