தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Thursday, October 18, 2012

மாபெரும் முற்றுகை போர்


நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு அக்டோபர் 22 காலை 11 மணிக்கு (இன்ஷா அல்லாஹ்)

காவிரி நதி நீரின் உரிய பங்கினை தமிழகத்திற்கு தர மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் கொடுக்காதே !
எனக்கோரி நெய்வேலியில் மாபெரும் அனல் மின் நிலைய முற்றுகை போர், தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெறும்.

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரித்து வாரீர்...
அழைக்கிறது மனிதநேய மக்கள் கட்சி,,,

பக்ரீத் பெருநாளில் பி.எட். கலந்தாய்வு ஒத்தி வைக்குமாறு மமக கோரிக்கை


முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாளில் நடைபெறவிருக்கும் பி.எட். கலந்தாய்வு மற்றும் கருத்தரங்குகளை ஒத்தி வைக்குமாறு மனிதநேய மக்கள் கட்சியின் மூத்தத் தலைவரும் இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா தமிழக உயர்கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மேலும் அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
வருகின்ற 27.10.2012 அன்று முஸ்லிம்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் பி.எட். பயிற்சியில் பயின்றுவரும் மாணவ/மாணவியர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் கருத்தரங்கம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதால் அதில் காலை 9:30 மணிக்கு பங்கேற்க வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலைதூர கல்வி இயக்குநர் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பக்ரீத் தினத்தன்று தமிழக அரசு விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது. இப்புனிதநாளில் காலை 8 மணி முதல் 12 வரை முஸ்லிம்கள் தங்களின் இறை கடமைகளை நிறைவேற்றியவாறு இருப்பர். இந்த வேளையில் தேர்வு எழுத்துவதுதோ கவுன்சிலிங் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்பது என்பது சிரமம்.
எனவே 27.10.2012 நடைபெறவுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக பி.எட். கவுன்சிலிங் மற்றும் கருத்தரங்க தேதிகளை மாற்றம் செய்து ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Wednesday, October 17, 2012

காவிரிக்காக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தலையில் கருப்பு முண்டாசு கட்டிக்கொண்டு அறவழி ஆர்ப்பாட்டம்


காவிரி நதி நீரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குரிய பங்கினை தர மறுக்கும் கன்னட அரசியல்வாதிகளையும், மொழி வெறியர்களையும் கண்டித்து மமக வின் சார்பில் இன்று (16-10-2012) திருவாரூரில் தலையில் கருப்பு முண்டாசு கட்டிக்கொண்டு அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காலை 10.30 மணியளவில் பழைய ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில், பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி கண்டன உரை நிகழ்த்தினார். மாநில துணை பொதுச் செயலாளர் சரவண பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் ஆயிரக்கணக்கில் திரளாக பங்கேற்றனர்.


thanks tmmk.in

Tuesday, October 16, 2012

தமிழகத்திற்கு காவிரி நதிநீரை திறந்துவிட கோரி தலையில் கறுப்பு முன்டாசு கட்டி போராட்டம்


மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுவைக்கு தரவேண்டிய காவிரி நதிநீரை வழங்க தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசியல்வாதிகளையும், கன்னட வெறியர்களையும் கண்டித்தும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதி நீரை தடையின்றி திறந்துவிட கர்நாடக அரசை வ-யுறுத்தியும் திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாளை காலை 10:30 மணியளவில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் "தலையில் கறுப்பு முன்டாசு கட்டி அறவழிப் போராட்டம்" நடைபெற உள்ளது இப்போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும், விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில அமைப்புச் செயலாளர் ராவுத்தர்ஷா தமுமுக மாநில செயலாளர் மீரான் மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

அன்புடன்
(பி.எம்.ஆர். சம்சுதீன்)

Monday, October 15, 2012

திருவாரூரில் காவிரிக்காக அறவழி ஆர்ப்பாட்டம். ஏற்பாடுகள் தீவிரம்


காவிரி நதி நீரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குரிய பங்கினை தர மறுக்கும் கன்னட அரசியல்வாதிகளையும், மொழி வெறியர்களையும் கண்டித்து மமக வின் சார்பில் நாளை (16-10-2012) திருவாரூரில் தலையில் கருப்பு முண்டாசு கட்டிக்கொண்டு அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
காலை 10.30 மணியளவில் பழைய ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி, பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில துணை பொதுச் செயலாளர் சரவண பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இதில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் திரளாக பங்கேற்க உள்ளனர்.
திருவாரூர் முழுக்க போராட்ட விளம்பரங்களும், மமக வின் கொடிகளும் பரபரப்பை ஊட்டிக் கொண்டிருக்கின்றன.

விழுப்புரம் வடக்கு மாவட்டம் - செயற்குழு கூட்டம்


13.10.2012 சனிக்கிழமை அன்று விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைத்த மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரம் RR மஹாலில் நடைபெற்றது. த.மு.மு.க. மாநில பொது செயலாளர் ப.அப்துல் சமது , ம.ம.க. இணை பொது செயலாளர் s.s.ஹாரூண் ரஷித் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் மாவட்டம், ஒன்றியம், நகரம் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Saturday, October 13, 2012

கோவை - மனித நேய மக்கள் கட்சின் புதிய கிளை திறப்பு விழா


கோவை மாநகர் மனிதநேய மக்கள் கட்சியின் புதிய கிளையான லாரி பேட்டை பின்புறம் உள்ள அண்ணா நகரில் மொத்த மீன் மார்க்கெட் கிளையை 13-10-2012 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கட்சியின் மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்கள் கொடி ஏற்றி திறந்து வைத்தார்கள். தமுமுக - மமக மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.