தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Saturday, October 6, 2012

த.மு.மு.க போராட்டத்தின் எதிரொலி : முஸ்லிம் மதகுருவை சந்தித்த அமெரிக்க அதிகாரி


முஸ்லிம்களைப் புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக எடுக்கப்பட்ட படத்திற்கு எதிர்வினையாக உலகெங்கும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையிலும் ஐந்து நாட்களுக்கு பல்வேறு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்நிலையில், சென்னை மசூதி ஒன்றின் தலைமை மதகுருவான ஷம்சுத்தீன் காசிமி என்பவரை சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் டேவிட் .கே .கேய்னர் (பொது விவகாரத்துறை அதிகாரி), மத்தேயு .கே பேஹ்(அரசியல் ரூபொருளாதார அதிகாரி ) , பின்னி ஜேகப் (மக்கள் தொடர்பு அதிகாரி). ஆகியோர் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
படம் குறித்து அமெரிக்க அரசு தரப்பில் வருத்தத்தையும், படக்குழுவினருக்குக் கண்டனத்தையும் தெரிவித்த அமெரிக்க அதிகாரிகளிடம், அமெரிக்கா உடனடியாக நடவடிக்கை எடுக்காதது பற்றி கண்டனம் தெரிவித்துள்ளார் காசிமி.

அமெரிக்க அரசின் சட்டத்தில் கருத்துச் சுதந்திரம் அபரிமிதமாக உள்ளது என்றும்,  கடந்த 50 ஆண்டுகளாக சட்டத்திருத்தம் செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறிய போது,  இனியேனும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிறர் மனதைக் காயப்படுத்துவது  கருத்துச் சுதந்திரத்தின் கீழ் வராது என்றும் மெளலவி தெரிவித்தார்.  உணர்வுகளைப் புரிந்துகொள்வதாகவும், அமெரிக்க அரசிடம் இது பற்றி தெரிவிப்போம் என்றும்  அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நன்றி : இந்நேரம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோவை பொள்ளாசி நகர் கிளையின் சார்பாக விழிற்புனர்வு பொதுக்கூட்டம்

இறைவனின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்...
தமுமுக எங்கள் இயக்கம் நாரே தக்பீர் எங்கள் முழக்கம்...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
கோவை பொள்ளாசி நகர் கிளையின் சார்பாக விழிற்புனர்வு பொதுக்கூட்டம் நடைபெர இருக்கிறது அனைவரும் தவராமள் கழந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் எழிற்சி உரை தமுமுக வின் போர்வாழ்{கோவை சைய்து}தலைப்பு{அமேரிக்காவின் சூழ்சியும் இஸ்லாமியர்களின் விழிற்புனர்வும்}நாள்=7=10=2012=சரியாக 7மனிக்கு நடைபெரும்-
இடம்-பொள்ளாசி திருவள்ளுவர் திடல்
 — 

Friday, October 5, 2012

இந்த வார மக்கள் உரிமையில்


படித்து விட்டீர்களா!!! மக்கள் உரிமை 9:20
>>இறைமொழியும் தூதர் வழியும்''மூன்று தன்மைகள்''

>>பல ஆண்டுகள் சிறை: விடுதலையாகும் அப்பாவிகளுக்கு இழப்பீடு தேவை! இல்லையெனில் வழக்கு!! நீதிபதி சச்சார் அதிரடி.

>>ஏன் இந்தப் போராட்டம்? எதற்காக இவ்வளவு ஆவேசம்? தினமணிக்கு இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு பதில்!.

>>பொறுப்பற்றவர்கள் சிந்திக்க வேண்டும்.

>>அமெரிக்க ஆதரவாளர்களின் கைகளில் நபிகள் பெருமானார் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம்.

>>பெருமானரை அவமதிக்கும் கார்ட்டூன் பிரான்சின் புதிய விஷமம்.
தமிழகத்திற்கு காவேரி திறந்துவிட கர்நாடகத்தை மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும்.

>>ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஊதுகுழல் யார்? ஆணவக்காரர்களுக்கு அறிவார்ந்த பதில்.

>>நபிகளாரை இழிவுபடுத்தும் குறும்படத்தைக் கண்டித்து... தமிழக முழுவதும் பொங்கியெழுந்த தமுமுக.

>>அதிரை அன்சாரி வழக்கு: சி.பி.ஐ விசரானை தேவை! உண்மை அறியும் குழு அறிக்கை....

>>பேரா.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏவின் சட்டமன்ற உரைகள்.

>>இளையவா... எழுந்துவா ... எழுச்சி - 18

>>சென்னையில் 24 முஸ்லிம் அமைப்புகள் போராட்டம்...
 >>மேலும் உலகச் செய்திகளும் மார்க்க செய்திகளும் 

அவசியம் படியுங்கள், பிறரையும் படிக்கத் தூண்டுங்கள்
.
'மக்கள் உரிமை'
7, வடமரைக்காயர் தெரு, மண்ணடி
சென்னை – 1

Monday, October 1, 2012

தமிழகத்திற்கு காவிரி நீர் தராவிட்டால், கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிடுவோம்! - மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கை


மனிதநேய மக்கள் கட்சி தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழகத்திற்கு காவிரி நீர் தரமறுக்கும் கர்நாடகா, இதுதொடர்பான இந்திய பிரதமரின் வேண்டுகோளையும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி இந்திய ஒருமைப்பாட்டை அவமதித்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கீழ்படிவதுபோல் காட்டிக்கொண்டு காவிரியில் இருந்து தண்ணீர் விட்டாலும் கூட வறட்சியால் வாடும் காவிரி பாசன விவசாயிகளின் துன்பத்தை அதிகப்படுத்தி தமிழ்நாட்டில் உணவுப்பஞ்சத்தை ஏற்படுத்த நினைக்கும் கர்நாடகா அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் சுயநலமும் கொடுமதியும் தமிழக மக்களையும் ஒன்றுபட்ட இந்திய நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழத்திற்கு தண்ணீர் தரவேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்வோம் என்ற கர்நாடக முதல்வரின் போக்கு கண்டிக்கத்தக்கது. தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை ஊக்கப்படுத்தும் கன்னட வெறியர்களின் போராட்டங்கள் கர்நாடகா வாழ் தமிழர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அதனைத் தடுக்கத் தவறியதோடு மறைமுகமாக, போராட்டங்களை ஊக்கப்படுத்தும் கர்நாடக அரசையும், தமிழர்களை ஏமாற்றி இரட்டை வேடம் போடும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் 16 மணி நேரத்திற்கும் அதிகமான அளவு மின்வெட்டால் தமிழக மக்கள் துன்பத்தில் வாடும் பரிதாப நிலையிலும் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழர்களுக்கு விரோதமாக காவிரி தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகாவின் தேசவிரோதப் போக்கு தொடர்ந்தால்... கர்நாடகாவுக்கான மின்சாரத்தை நிறுத்தக்கோரி நெய்வேலி அனல் மின் நிலையத்தினை முற்றுகையிட்டு மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தவும் மனிதநேய மக்கள் கட்சி தயங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
(மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ)

அதிரை தமீம் அன்சாரிக்கு ஆதரவாக களமிறங்குகிறது தமுமுக


இன்று (26.09.2012) தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் அதிராம்பட்டினம் தமீம் அன்சாரி வழக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தமீம் அன்சாரி, ஒரு புகைப்படக் கலைஞர் என்பதும், குறும்படம் இயக்கும் எண்ணத்துடன் சில முயற்சிகள் செய்துள்ளார் என்பதும், இலங்கைக்கு காய்கறி வியாபாரம் செய்துள்ளார் என்பதும் மட்டுமே உண்மை என்பதும், போலீசார் கூறுவதுபோல் அவர் தீவிரவாதியோ, அன்னிய கைக்குகூலியோ இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
காஷ்மீர், குஜராத், டெல்-, பீஹார், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைப் போல இங்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் முயற்சியை "க்யூ பிராஞ்ச்' போலீசார் தொடங்கி வைத்திருப்பதாக நிர்வாகக்குழு கருதியதால், இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனப் போஸ்டர் ஒட்டுவது என்றும், விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி க்யூ பிராஞ்ச் போலீசின் சதியை அம்பலப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.